• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 2 முறையும் கைக்கொடுக்காத திருமணம்.. மகனுக்காகவே மீண்டு வந்த பாக்கியலட்சுமி ராதிகா!

2 முறையும் கைக்கொடுக்காத திருமணம்.. மகனுக்காகவே மீண்டு வந்த பாக்கியலட்சுமி ராதிகா!

பாக்கியலட்சுமி ரேஷ்மா

பாக்கியலட்சுமி ரேஷ்மா

கணவரிடமும் விவகாரத்து பெற்று இப்போது சிங்கிள் மதராக தனது மகனை வளர்த்து கொண்டிருக்கிறார்.

  • Share this:
    பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடிக்கும் நடிகை ரேஷ்மா தனி ஆளாக நின்று தனது மகனை வளர்த்து வரும் சிங்கிள் மதர் ஸ்டோரி பற்றி பலருக்கும் தெரியாது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இல்லத்தரசிகளின் உள்ளம் கவர்ந்த சீரியலான பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்தில் நடிப்பவர் நடிகை ரேஷ்மா. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்த ரோலில் இதற்கு முன்பு ஜெனிஃபர் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் அவருக்கு சின்னத்திரையில் மிகப் பெரிய ஃபேன்ஸ் ஃபோலோ உருவானது. ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தால் அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகினார். அடுத்து இந்த ரோலில் யார் நடிப்பார்? என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் ரேஷ்மா ராதிகாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கரண்டாக அவர் தான் சீரியலில் ராதிகாவாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். புஷ்பா புருஷன் காமெடி நடிகை ரேஷ்மா என்றால் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ்.

    நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரான இவர் முதன் முதலில் சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியல் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார்.ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்த அந்த சீரியலுக்குப் பிறகு, ‘மசாலா படம்’ படத்தில் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். வெள்ளித்திரையில் 7 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மரகதவீணை, 10 மணி கதைகள், வாணி ராணி, பகல் கனவு என பல சீரியலில் நடித்தார். நடிப்பு மட்டுமில்லை சன் சிங்கர் ஷோவை தொகுத்தும் வழங்கி இருக்கிறார். இதற்கு இடையில் நடிப்பை விட்டு விலகி பிரபல செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராகவும் ரேஷ்மா பணிப்புரிந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்னையில் பிறந்த ரேஷ்மா படித்தது, வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில் தான். படித்து முடித்த உடனே ஏர்ஹோஸ்டில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது 18 வயதிலே அவருக்கு முதல் திருமணம் நடந்தது. பெற்றோர்களால் பார்த்து நடத்தி வைக்கப்பட்ட அந்த திருமணம் அவருக்கு சரியாக அமையவில்லை. அதிலிருந்து விவகாரத்து பெற்று 2 ஆவது காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் விதி அவரின் வாழ்க்கையில் விளையாட 2 ஆவது கணவரால் ரேஷ்மா கடும் மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல்களை சந்தித்தார். இந்த பர்சனல் விஷயத்தை எல்லாமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரேஷ்மா கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். அதன் பின்பு அந்த கணவரிடமும் விவகாரத்து பெற்று இப்போது சிங்கிள் மதராக தனது மகனை வளர்த்து கொண்டிருக்கிறார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Reshma Pasupuleti இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@reshmapasupuleti)






    தனது மகனுக்காக மட்டுமே இத்தனை பிரச்சனைகளில் இருந்து மீண்டு வாழ்வதாக ரேஷ்மா பல இடங்களில் உணர்வுபூர்வமாக பகிர்ந்து உள்ளார். அதுமட்டுமில்லை சிங்கிள் மதராக தனது மகனை வளர்ப்பதில் பல பிரச்சனைகளை அவர் சந்தித்துள்ளாராம். ஆனாலும் மன உறுதியுடன் மகனை நல்ல முறையில் வளர்த்து வருகிறார். என்னத்தான் நடிப்பு, சீரியல், டான்ஸ் மூலம் நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களை மகிழ்வித்தாலும் அவர்கள் வாழ்க்கையிலும் பல சோகங்கள்  புதைந்து தான் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: