• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாவம்... கோபி சொன்ன பொய்யை நம்பி நடு ராத்திரியில் பாக்கியா செய்த செயல்!

பாவம்... கோபி சொன்ன பொய்யை நம்பி நடு ராத்திரியில் பாக்கியா செய்த செயல்!

கடமைக்கு நல்லா இருக்குன்னு சொல்லி பாக்கியாவை வெளியே அனுப்புகிறார் கோபி.

  • Share this:
    பாக்கியலட்சுமி சீரியலில் கணவர் சொன்ன பொய்யை நம்பி பாக்கியா செய்யும் செயல்கள் ரசிகர்களை அய்யோ பாவம்! என சொல்ல வைக்கிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ஆகும். வீட்டில் வாழும் இல்லத்தரசிகளின் பிரதிபலிக்காக தான் பாக்கியலட்சுமி சீரியலை ரசிகர்கள் பார்க்கின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சீரியலில் புடவை கதை பெரும் பங்கு வகிக்கிறது. ராதிகாவும் கோபியும் கடைக்கு போய் புடவை எடுக்க அதை வீட்டு வேலைக்காரி பார்க்க கோபி பாடோ திண்டாட்டம் ஆனது. ஆனாலும் அதையெல்லாம் எப்படியோ சமாளித்து விட்டு ஜாலியாக இருந்த கோபி இப்போது ஒரு தப்பை மறைக்க அடுத்தடுத்த பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    ராதிகாவுக்கு ஆசையாக கோபி புடவை எடுத்துக் கொடுக்க, அதை ராதிகா தவறுதலாக கோபி காரில் வைத்துவிட்டு செல்கிறார். இதை சுதாரித்த கோபி யாருக்கும் தெரியாமல் புடவையை தனது ரூம் அலமாரியில் வைக்கிறார். பொண்டாட்டி கிட்ட மறைக்க முடியுமா என்ன? தெரியாமல் அந்த புடவை பாக்கியா கண்ணில் பட, உனக்கு தான் புடவை. சர்பிரைஸா வாங்கிட்டு வந்தேன்னு அடுத்த பொய்யை சொல்லி பாக்கியாவிடம் இருந்து தப்பிகிறார் கோபி.

    கோபி சொன்ன பொய்யை உண்மை என நம்பி பாக்கியா, சந்தோஷ கனவில் துள்ளி குதிக்கிறார். முதன்முறையாக கோபி புடவை வாங்கி தந்ததை எண்ணி செம்ம ஹாப்பியாக இருக்கிறார். ஆனால் ராதிகாவோ புடவையை கேட்டு கோபியை டார்ச்சர் செய்ய, அதே கடைக்கு போய் வேறு புடவையை வாங்கிட்டு வந்து ராதிகாவிடம் கொடுக்கிறார் கோபி. நேற்றைய எபிசோடு இதில் நிறைவடைய இன்றைய எபிசோடில் ராதிகா அந்த புடவை இது இல்லை. நாம எடுத்தது வேற கலர்ன்னு கோபியிடம் மள்ளுக்கு நிற்கிறார். வாங்க கடைக்கு போய் கேட்கலாம்ன்னு கோபியை கூப்பிடுகிறாள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடைக்கு போனால் மாட்டிப்போம் என்பதைப் புரிந்து கொண்ட கோபி, அதுதான் இது, இதுதான் அது அப்படின்னு ஏதோ சொல்லி ராதிகாவை சமாளிக்கிறார். ஆனால் கடைசி வரையில் ராதிகா மனதில் சந்தேகத்திற்கு பதில் கிடைக்கவில்லை. இந்த பக்கம், கோபி எடுத்து கொடுத்த புடவையை ஆசையோடு கட்டி கொண்டு நடு இரவில் கோபியின் ரூமுக்கு போய் புடவை எப்படி இருக்கிறது என பாக்கியா கேட்க, கடமைக்கு நல்லா இருக்குன்னு சொல்லி பாக்கியாவை வெளியே அனுப்புகிறார் கோபி.

    உண்மையில் பாக்கியா பாவம் தான். அடுத்து ஊருக்கு போய் இருக்கும் அமிர்தாவுடன் எழில் ஃபோனில் பேச, அதை இனியா கலாய்க்கிறார். பொழுது விடிந்ததும் வழக்கம் போல் டைனிங் டேபிளில் மொத்த குடும்பமும் கூட, இனியா மதர்ஸ்டே நிகழ்ச்சி பற்றி கூறி பாக்கியாவை ஸ்கூலுக்கு அழைக்கிறாள். டான்ஸ் ஆடனும், பாட்டு பாடனும் நான் வரல, கூச்சமாக இருக்குன்னு சொல்லி பாக்கியா வழிய, எழில், இனியா, ஜெனி எல்லோரும் பாக்கியாவை தயார் செய்ய உதவுவதாக கூறுகின்றனர். அப்ப கண்டிப்பா மதர்ஸ்டே நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் இருக்கு. ஏன்னா? கண்டிப்பாக அந்த நிகழ்ச்சிக்கு ராதிகாவும் வருவார், பாக்கியா கோபி எடுத்துகொடுத்த சேலையை கடிக்கொண்டு செல்வார். வழக்கம் போல் கோபி நிலைமை திண்டாட்டம் தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: