ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோபியிடம் ருத்ரதாண்டவம் ஆடும் ராதிகா! பாக்கியலட்சுமியில் உச்சக்கட்ட பரபரப்பு

கோபியிடம் ருத்ரதாண்டவம் ஆடும் ராதிகா! பாக்கியலட்சுமியில் உச்சக்கட்ட பரபரப்பு

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமியில் உண்மை எல்லாம் தெரிந்த பின்பு ராதிகா எடுக்க போகும் அதிரடி முடிவு என்ன?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வரும் முக்கியமான எபிசோடு இன்று ஒளிப்பரப்பாகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இன்றைய எபிசோடில் ராதிகா ருத்ரதாண்டம் ஆடுகிறார்.

கோபியின் தகிடுதத்தம் கடைசியில் அவர் மூலமே  வெளி வந்து விட்டது. குடித்து விட்டு போதையில் எல்லா உண்மைகளையும் சொல்கிறார் கோபி. இனியா , செழியன், எழில் தான் என்னுடைய பிள்ளைகள், பாக்கியா தான் என் மனைவி என மொத்த உண்மையையும் கோபி சொல்லி விடுகிறார். அதே போல் பாக்கியாவிடம் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் ராதிகாவிடம் காட்டி விடுகிறார். ராதிகாவுக்கு தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. மகா சங்கமத்தில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி குடும்பம் தான் கோபியின் உண்மை முகத்தை வெளியில் கொண்டு வந்துள்ளனர்.

அவர்கள் ராதிகாவிடம் போய் கோபி நல்லவர் இல்லை என சொல்ல, ராதிகாவுக்கு சந்தேகம் வந்து,  கோபி குடும்பத்தை பற்றி விசாரிக்க கோபிக்கும் ராதிகாவுக்கும் சண்டை வெடிக்கிறது. சண்டையில் கோபியை வீட்டை விட்டு அனுப்புகிறார் ராதிகா. இதை தாங்க முடியாமல் குடித்துவிட்ட கோபி போதையில் தன்னை அறியாமல்  ராதிகாவிடம் எல்லா உண்மையும் சொல்கிறார். விருப்பம் இல்லாமல் பாக்கியாவுடன் வாழ்வதாக  சத்தியம் செய்கிறார். ஆனாலும் ராதிகா மனசு அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

மீண்டும் சீரியலுக்கு கம்பேக் கொடுக்கும் ’திருமதி செல்வம்’ அர்ச்சனா?

இங்கு வீட்டில், ரொம்ப நேரம் ஆகியும் கோபி வீட்டுக்கு வரவில்லை என பாக்கியா தவிக்கிறார். அந்த நேரம் பார்த்து கோபியின் நண்பர் பாக்கியாவுக்கு ஃபோன் செய்து கோபியை பற்றி விசாரிக்கிறார். வழக்கம் போல் கோபி லேட்டாக வருவார் என மொத்த குடும்பமும் நினைக்கின்றனர். ஆனால் கோபி, ராதிகா வீட்டில் குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருக்கிறார். உண்மை எல்லாம் தெரிந்த பின்பு ராதிகா எடுக்க போகும் அதிரடி முடிவு என்ன? என்பது கதையின் அடுத்த கட்டம்.

புகழின் உச்சத்தில் பிக் பாஸ் தாமரை… ஷாப்பிங் போன இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்!

இணையத்தில் வெளியாகும் தகவலின் படி, ராதிகா ரோல் நெகடிவ்வாக மாறும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv