ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

2 குழந்தைகளுக்கு அம்மா.. அதே இளமை தோற்றம்! பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் குடும்பம்

2 குழந்தைகளுக்கு அம்மா.. அதே இளமை தோற்றம்! பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் குடும்பம்

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நேரத்தில், அந்த சீரியலில் ராதிகாவாக நடித்த ஜெனிஃபர், திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிபர்.  இவருக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஜெனி 2 மகன்கள், கணவர் என குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

18 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் ஜெனிஃபர் ஆடிய நடனம் இன்று வரை பலராலும் ரசிக்கப்படுகிறது. ஒருசில படங்களில் நடித்தவர் அதன் பின்பு சினிமாவை விட்டு விலகினார். அதே சமயம் நடனத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். அப்போது தான் ஸ்வீட் சர்ப்பிரைஸாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுத்தார். அதற்கு முன்பு குஷ்புவின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலிலும் ஒருசில எபிச்சோடுகள் நடித்து இருந்தார். லட்சுமி ஸ்டோர்ஸை விட பாக்கியலட்சுமி ராதிகா ரோல் மிகப் பெரிய ரீச வாங்கி தந்தது.

கடைசியில இப்படி ஆயிடுச்சு.. ரசிகர்களை ஏமாற்றிய பிரியங்கா – ராஜூ!

பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நேரத்தில், அந்த சீரியலில் ராதிகாவாக நடித்த ஜெனிஃபர், திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ஏன் சீரியலில் இருந்து விலகினார் என ரசிகர்களுக்கு அப்போது தெரியவில்லை. இது குறித்து சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "முதலில் ராதிகா கதாப்பாத்திரம் மிகவும் அமைதியானவள் என்கிற ரீதியில் சொல்லப்பட்டது.ஆனால், கதை பயணிக்கும்போது திடீரென நெகடிவாக காண்பிக்கத் தொடங்கினார்கள். இனி வரும் காலங்களில் ராதிகா கதாப்பாத்திரம் வில்லியாக மாற இருப்பதால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் சீரியலில் இருந்து விலகிவிட்டேன் எனக் கூறினார். இது உண்மையா இருக்குமோ என ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில், திடீரென மற்றொரு வீடியோவில் இன்னொரு சர்பிரைஸான காரணத்தை தெரிவித்தார்.

உண்மையை கண்டுப்பிடித்த சந்திரகலா.. தமிழ் – சரஸ்வதிக்கு இனி பிரச்சனை தான்!


அந்த வீடியோவில், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார் ஜெனிஃபர். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் என அன்பு கோரிக்கையும் வைத்திருந்தனர். அவரின் விலகலுக்கு பின்பு தான் ரேஷ்மா தான் இப்போது ராதிகாவாக நடித்து வருகிறார். அவரும் இந்த ரோலுக்கு மிகச் சரியாக பொருந்தி விட்டார். கோபியை மிரட்டி எடுப்பதில் ரேஷ்மா நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார். இந்நிலையில், ஜெனிஃபர் குடும்பத்துடன் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவரின் முகத்தில் அந்த சிரிப்பு மட்டும் மாறாமல் அதே அழகுடன் ஜொலிக்கிறது. 2 மகன்கள், கணவருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஜெனிஃபர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். ஃபோட்டோவை பார்த்த ரசிகர்கள் ஜெனிஃபரின் ரீ என் ட்ரி குறித்து கேட்டு வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv