பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் மொத்த ஆட்டத்திற்கு முடிவு கட்டும் வகையில் என்ட்ரி கொடுக்கிறார் ராதிகாவின் அண்ணன். அவர் வேற யாருமில்லை பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் தான்.
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி - ராதிகா - ராஜேஷ் பிரச்சனை போலீஸ் வரை சென்று விட்டது. ஆனால் இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியாது. ராதிகா, கோபியை வீட்டை விட்டு துரத்த அதை ராஜேஷ் பார்த்து விட பிரச்சனை பெரிதானது. பதிலுக்கு ராஜேஷ் ராதிகாவிடம் பிரச்சனை செய்கிறார். அதாவது ராதிகாவின் நடவடிக்கை சரியில்லை, முதல் கணவரை டைவர்ஸ் செய்தார், இப்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகும் நபரையும் ஏமாற்றி விட்டார் என்பதே ராஜேஷின் வாதம். இதை எல்லாம் பார்த்து ,மகள் மயூவின் அமைதி கெட்டு போய்விடுவதாக போலீஸில் புகார் கொடுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் விசேஷம்.. திரண்டு சென்ற சின்னத்திரை பிரபலங்கள்!
போலீஸ் ராதிகாவை இந்த விசாரணைக்காக வர சொல்கிறார்கள். அப்போது தான் ராதிகாவின் அம்மா ஒரு முக்கியமான நபருக்கு ஃபோன் செய்வதாக கூறுகிறார். அதோடு சனிக்கிழமை எபிசோடு முடிவடைந்தது. நேற்றைய எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனுக்கு கோபி, ராதிகா, ராதிகாவின் அம்மா ஆகியோர் செல்கின்றனர். பிரச்சனை என்ன? என்பதை போலீஸ் மூவரிடம் விசாரிக்கின்றனர். அதில் கோபி முழுக்க முழுக்க ராதிகாவுக்கு சப்போர்ட் செய்கிறார். போலீஸ் ராஜேஷ் கொடுத்த புகாரில் நியாயம் இருப்பதாக நம்புகின்றனர். ராஜேஷூம் தனது தரப்பு நியாயத்தை எடுத்து சொல்கிறார்.
யோகி பாபுவுக்கு ஜோடியான குக் வித் கோமாளி பிரபலம்! யாருன்னு நீங்களே பாருங்க
அப்போது தான் சீரியலில் புது என்ட்ரியாக நேத்ரன் என்ட்ரி கொடுக்கிறார். அவர் ராதிகாவின் அண்ணன் சந்துரு என்ற ரோலில் நடிக்கிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் இவர், ராதிகாவிடம் என்ன பிரச்சனை என கேட்கிறார். பிறகு சமாதானம், செய்து வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.
தற்போது சீரியலில் சந்துருவின் என்ட்ரி முக்கிய திருப்பத்தை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர் தான் பாக்கியாவிடம் கோபி பற்றிய உண்மைகளை சொல்வார் என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகிறது. இவரால் சீரியலில் அடுத்து நடக்க போகும் திருப்பம் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.