பாக்கியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!

பாக்கியலட்சுமி சீரியல்

நடிகை ரேகா,பாக்கியாவுடன் செல்பி எடுத்துக் கொண்டு பாராட்டுகிறார்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் திறமைக்கு பாராட்டு கிடைத்து பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

  இல்லத்தரசிகளின் பிரதிபலிக்காக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெண்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு. சீரியல் தொடங்கிய குறுகிய காலத்திலே பாக்கியலட்சுமி சீரியல் வேற லெவலில் ஹிட் அடித்தது. குறிப்பாக பாக்கியவாக நடிக்கும் நடிகை சுசித்ராவை மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் சக அம்மாவாக, மாமியாராக, மருமகளாக பார்க்க தொடங்கினர். சீரியல் என்றாலே பெண்கள் தான் அதிகம் பார்ப்பார்கள் என்ற பேச்சும் உண்டு. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலை ஏராளமான பெண்களே விரும்பி பார்க்க தொடங்கினர். குடும்பத்திற்காகவே வாழும் பாக்கியாவை கணவர் கோபி, முதல் மகன் செழியன் எல்லோரும் ஏமாற்ற மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு நடுவில் பாக்கியா குடும்பத்தை வழி நடத்துவதே இந்த சீரியலின் கதை.

  கோபி, ராதிகாவுக்காக எடுத்த புடவையை பொய் சொல்லி பாக்கியாவிடம் தர, அந்த புடவையை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார் பாக்கியா. இந்த் நேரத்தில் தான் இனியா, மத்ர்ஸ் டே நிகழ்ச்சிக்கு பாக்கியாவை வர சொல்லி வற்புறுத்துகிறார். சிறந்த அம்மா 2021 என்ற பெயரில் தனது பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பாக்கியாவை இனியா வற்புறுத்தினார். இதற்காக பள்ளியில் நடைபெறும் போட்டியில் ஆட வேண்டும், பாட வேண்டும் என்றும் இனியா கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முதலில் வெட்கப்பட்டு வரவில்லை என்று சொன்ன பாக்கியாவை எழில் ஊக்கப்படுத்த போட்டியில் கலந்து கொள்ள பாக்கியா தயாரானார். இந்நிலையில், பாக்கியா இனியாவுடன் பள்ளிக்குக்கு சென்று அந்த போட்டியில் கலந்துகொண்டு விருதையும் வெல்கிறார்.இதுக் குறித்த புரமோ தான் வெளியாகியுள்ளது, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரும் நடிகை ரேகா தான் பாக்கியாவுக்கு விருதை கொடுக்கிறார்.



  இந்த புரமோவில் பாக்கியா, பூ பூக்கும் ஓசை பாடலுக்கு ஸ்டேஜ் மேலே ஏறி நடனம் ஆடுகிறார். அதற்கு அடுத்து, நடுவர்கள் கேட்கும் கேள்விக்கு நச் என்று பதில் சொல்கிறார். இறுதியில் பாக்கியாவுக்கு மிகப் பெரிய அங்கீகாரமான சிறந்த அம்மா பட்டம் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லை, நடிகை ரேகா,பாக்கியாவுடன் செல்பி எடுத்துக் கொண்டு பாராட்டுகிறார். சந்தோஷத்தில் இனியா, பாக்கியாவை கட்டி பிடித்து முத்தம் தருகிறார். வீட்டில் கோபி மற்றும் மாமியாரால் வேலைக்கு ஆகமாட்டாய் என ஒதுக்கப்பட்ட பாக்கியா இன்று தனது திறமையால் சிறந்த தாய் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: