Home /News /entertainment /

Baakiyalakshmi: தன் வாயால் மீண்டும் மீண்டும் பாக்யாவிடம் மாட்டிக் கொள்ளும் கோபி

Baakiyalakshmi: தன் வாயால் மீண்டும் மீண்டும் பாக்யாவிடம் மாட்டிக் கொள்ளும் கோபி

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்

ராதிகா எப்போ சமாதானமாகி கல்யாணத்துக்கு ஓகே சொல்றாளோ அப்போ பாக்கியாவுக்கு டைவேர்ஸ் கொடுத்துட்டு, ராதிகாவ கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான், என நினைக்கிறார் கோபி.

    தன்னிடம் கோபித்துக் கொண்டு போன பாக்கியலட்சுமியை சமாதானப்படுத்தி அழைத்து வர நினைக்கும் கோபி மீண்டும் தன் வாயால் மாட்டிக் கொள்கிறார்.

    விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

    பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ராதிகாவாக ரேஷ்மாவும், பாக்யா வீட்டில் பணிபுரியும் செல்வியாக கம்பம் மீனாவும் நடித்து வருகிறார்கள்.

    மனைவி ராதிகாவை ஏமாற்றி விட்டு ராதிகாவை திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்திருந்தார் கோபி. இப்போது பற்றிய எல்லா உண்மையும் தெரிந்து விட்டதால், பாக்கியா வீட்டை விட்டு சென்று விட்டார். அவருக்கு துணையாக செல்வி அக்காவும் எழிலும் அவருடனே சென்று விட்டனர். பாக்கியா போன சோகம் மொத்த குடும்பத்திற்கும் இடி விழுந்தது போல் உள்ளது. அப்பா மீது அளவுக்கு அதிகமான பாசத்தை கொட்டும் இனியாவே அவரை வெறுத்து ஒதுக்குகிறார். ஜெனியிடம், அம்மாவை பார்க்க வேண்டும் என கதறுகிறார்.

    போனி கபூரை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... ஏகே61 அப்டேட் கேட்கும் ரசிகர்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், “ராதிகா எப்போ சமாதானமாகி கல்யாணத்துக்கு ஓகே சொல்றாளோ அப்போ பாக்கியாவுக்கு டைவேர்ஸ் கொடுத்துட்டு, ராதிகாவ கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான். அதுக்கு முன்னாடி எதாவது பேசி பாக்கியாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடனும்” என யோசிக்கிறார் கோபி. பின்னர் பாக்கியாவிடம் சென்று, “நான் செஞ்சதெல்லாம் சரின்னு சொல்ல வரல, வீட்ல நம்ம குழந்தை ரொம்ப கஷ்டப்படுறா, வீட்டுக்கு வா” என்கிறார்.



    அதற்கு, “இப்படி ஒரு தப்ப திரும்ப பண்ண மாட்டீங்கன்னு நா எப்படிங்க நம்புறது. எனக்கு உத்திரவாதம் தரேன்னு சொல்லுங்க, நான் வர்றேன்” என சத்தியம் செய்ய சொல்லி கையை நீட்டுகிறார். அப்போது, “சத்தியமா நீ தான் என் வாழ்க்கை ராதிகா” என்கிறார் கோபி. இதைக்கேட்டு அதிர்ச்சியாகிறார் பாக்யா.
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி