Home /News /entertainment /

மீண்டும் ராதிகாவுடன் சேர துடிக்கும் கோபி.. பாக்கியாவிடம் வசமாக சிக்கினார்!

மீண்டும் ராதிகாவுடன் சேர துடிக்கும் கோபி.. பாக்கியாவிடம் வசமாக சிக்கினார்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

கோபி, ராதிகா கையை பிடித்து பேசுவதை பார்த்ததும் பாக்கியாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரத்திற்கான பரபரப்பு ட்விஸ்ட் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

    விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். எழிலை தவிர மொத்த குடும்பமும் பாக்கியாவுக்கு எதிராக நிற்கிறார்கள். இருக்குற கோபத்தில் மாமியார் வீட்டுடன் செட்டில் ஆக நினைக்கிறார் செழியன். அந்த அளவுக்கு இனியா, ஈஸ்வரி அம்மா, செழியன் எல்லோரும் பாக்கியா மீது கோபத்தில் இருக்கின்றனர். இப்படி இருக்கையில் பாக்கியா ஒருபக்கம் 1 வருடத்திற்குள் 60 லட்சம் ரெடி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதுப்பற்றி செல்வியிடமும் அடிக்கடி பேசி வருகிறார்.

    கதைப்படி இப்போது கோபி ஹோட்டல் ரூமில் தங்கி இருக்கிறார். இன்றைய எபிசோடில் அவரை பார்க்கும் ராதிகா குற்றணர்ச்சியால் அழுகிறார். தன்னால் தான் கோபிக்கு இப்படியொரு நிலைமை என நினைக்கிறார். இந்நிலையில் அடுத்த வாரம் சீரியலில் நடக்கவிருக்கும் அதிரடி திருப்பங்கள் குறித்த புரமோ இன்றைய எபிசோடின் இறுதியில் ஒளிப்பரப்பாகிறது.

    சின்னத்திரையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி சோபியா என்ட்ரி!

    ரோட்டில் கோபி, வழக்கம் போல் கோபியின் கையை பிடித்துக் கொண்டு கல்யாணம் பற்றி பேசுகிறார். ராதிகாவும் அமைதியாக நின்று அவர் சொல்வதை கேட்கிறார். இந்த நேரம் பார்த்து பாக்கியா ஸ்கூட்டியில் அந்த பக்கம் செல்கிறார். ராதிகாவுடன் கோபியை பார்த்ததும் அவருக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. அதுமட்டுமில்லை நடு ரோட்டில் நின்று கொண்டு கோபி, ராதிகா கையை பிடித்து பேசுவதை பார்த்ததும் பாக்கியாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

    விஜய் டிவி சீரியல் பிரபலத்தின் அக்கா அந்த நடிகையா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

    அடுத்து என்ன நடக்கும் என்பது அடுத்த வார எபிசோடில் தான் தெரியும். ,முன்பு போல் இல்லை கோபியின் நிலையை நினைத்து ராதிகா வருத்தப்படுகிறார். அதற்கேற்ப ராதிகாவின்  அம்மாவும் அண்ணனும் அவரின் மனசை மாற்ற நினைக்கிறார்கள். ஒருவேளை ராதிகா மனசு மாறி கோபியை ஏற்றுக் கொள்வாரா? என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அதற்கான பதில் இயக்குனருக்கு தான் தெரியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி