Home /News /entertainment /

ஒரே நேரத்தில் கோபி மீது சந்தேகம் கொள்ளும் பாக்கியா - ராதிகா. அடுத்து என்ன நடக்க போதோ!

ஒரே நேரத்தில் கோபி மீது சந்தேகம் கொள்ளும் பாக்கியா - ராதிகா. அடுத்து என்ன நடக்க போதோ!

பாக்கியலட்சுமி கோபி

பாக்கியலட்சுமி கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது

    பாக்கியலட்சுமி சீரியலில் சுவாரசியத்தை கூட்ட சீரியல் குழு திரைக்கதையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இத்தனை நாட்களாக 2 பெண்களையும் கோபி கூலாக ஏமாற்றி வந்தார், ஆனால் இனி அப்படியில்லை ஒரே நேரத்தில் கோபியின் நடவடிக்கையில் ராதிகா மற்றும் பாக்கியாவுக்கு சந்தேகம் வந்து விட்டது.

    இன்றைய எபிசோடில் நடந்ததை இப்போது பார்க்கலாம், அதாவது ராதிகா, டீச்சரை பற்றி பேச உடனே கோபிக்கு கோபம் வந்து விடுகிறது. ஆனால் இந்த முறை ராதிகா விடுவதாக இல்லை, கோபியிடம் டீச்சர் மீது உங்களுக்கு என்ன கோபம்? என சந்தேகத்துடன் கேட்கிறார். கோபியும் ஏதோ ஏதோ சொல்லி சமாளிக்க பார்க்கிறார். ஆனாலும் ராதிகாவுக்கு கோபி மீது நம்பிக்கை இல்லை. டீச்சரை இதுவரை மீட் செய்ததில்லை, அவரை பற்றி பேசினாலே பிடிக்க மாட்டுது ஏன் கோபி? என முகத்தில் அடித்தது போல் ராதிகா கேட்க,  ஆளை விட்டால் போதும் சாமி என அங்கிருந்து எஸ்கேப் ஆகுகிறார் கோபி.

    சரி ராதிகாவிடம் இருந்து தப்பித்து விட்டோம் என கோபி நினைக்கையில், இரவு கோபி ரூமில் வந்து தூங்குகிறார் பாக்கியா. இப்போது தான் அடுத்த ட்விஸ்டே. மிட் நைட்டில் ராதிகா ஃபோன் செய்ய, ரகசியமாக பேசுகிறார் கோபி.  பாக்கியா தூங்கி விட்டதாக கோபி நினைக்கிறார்.  ஆனால் இல்லை, பாக்கியா தூங்குவது போல் நடித்துக் கொண்டே கோபியின் பேச்சை கவனிக்கிறார். சிறிது நேரம் கழித்து கோபி சத்தமில்லாமல் வெளியில் சென்று ராதிகாவிடம் ஃபோன் பேசுகிறர்.

    விருது பெறாத காற்றுக்கென்ன வேலி சீரியல் செய்த சாதனை! கொண்டாடும் ரசிகர்கள் கூட்டம்

    மறுநாள் பொழுது விடுகிறது. ராதிகா வழக்கம் போல் கோபிக்கு ஃபோன் செய்கிறார். கோபி உடனே டியர், டார்லிங் என பேசி சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். பாக்கியா ரூமில் இல்லை என நினைத்து கோபி தைரியமாக பேச, பின்னாடி பாக்கியா நின்று கொண்டு கோபி பேசுவதை கவனித்து விடுகிறார். திரும்பி  பார்த்த கோபிக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. பாக்கியாவுக்கும் சரி ராதிகாவுக்கும் சரி கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கோபி மீது சந்தேகம் வந்துவிட்டது.

    ஒரு சீரியல் ஹீரோயினுக்கு இது கூடவா தெரியாது? விஜய்டிவி சீரியலுக்கு வந்த சோதனை!

    இதன் அர்த்தம் கூடிய விரைவ்ல் கோபி மாட்டிக் கொள்வார் என்பது தான், இந்த ட்விஸ்டுடன் இன்றைய சீர்யல் எபிசோடு முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி