Home /News /entertainment /

ராதிகாவிடம் உண்மையை சொல்ல போகும் கோபி அப்பா.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன?

ராதிகாவிடம் உண்மையை சொல்ல போகும் கோபி அப்பா.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி கோபி வழக்கம் போல் எஸ்கேப் ஆகிவிடுவாரா? என பல கேள்விகளுக்கு நாளைய எபிசோடில் விடை கிடைக்கும்.

    பாக்கியலட்சுமி சீரியலில் இது முக்கியமான கட்டம். கோபியின் மொத்த ஆட்டத்திற்கும் முடிவு கட்ட அவரின் அப்பா முக்கிய முடிவை எடுத்துள்ளார். இனி சீரியலில் அடுத்து என்ன ஆகும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    பாக்கியலட்சுமி சீரியல் ஒட்டுமொத்த தமிழ் குடும்பங்களும் கொண்டாடும் சீரியல் லிஸ்டில் இணைந்துள்ளது. அதற்கு மிக முக்கியமான காரணம், இந்த சீரியலின் கதைக்களம் தான். பாக்கியாவை ஏமாற்றும் கணவர் ரோலில் சதீஷ் ஒருபக்கம் இல்லத்தரசிகளின் வெறுப்பை சம்பாதித்தாலும் இந்த சீரியலின் வெற்றிக்கு மிக முக்கிய்மனா காரணம் அவர் தான். ஒவ்வொரு பெண்களும் கோபி கதாபாத்திரத்தை வில்லியாக பார்க்க சீரியலின் டி.ஆர்.பி எகிறி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அடுத்த ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது.

    இதையும் படிங்க.. மகள் என்று தெரியாமல் பாரதி செய்த வேலை.. ஓடி வந்த கண்ணம்மா!

    அதாவது, கோபியை ஒரு பெண்ணுடன் பார்த்த எழில், அதை தாங்கி கொள்ள முடியாமல் வெளியிலும் சொல்ல முடியாமல் கதறி அழுகிறார். பின்பு தனது தாத்தாவிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லி மனம்விட்டு அழுகிறார். அப்போதைக்கு எழிலை சமாதானம் செய்து வைத்த கோபியின் அப்பா, எழில் சென்ற பின்பு கோபியின் ஆட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என நினைக்கிறார். இப்படி இருக்கையில், ராதிகா வீட்டை காலி செய்ய முடிவு எடுத்துவிட்டார்.

    ராஜேஷ் வந்து பிரச்சனை செய்வதால் குழந்தை மயூவுடன் வேற வீட்டுக்கு குடி போகிறார். இந்த பிளானை தந்ததே கோபி தான். ராதிகா பக்கத்தில் இருந்தால் ஒருநாள் மாட்டிக் கொள்வோம் என நினைக்கும் கோபி ,ராதிகாவை தூரமாக அழைத்து செல்ல முடிவு எடுக்கிறார். இந்த நேரத்தில் தான் கோபி அப்பா, இனிமேல் இந்த உண்மையை மறைக்க கூடாது, ராதிகாவிடம் பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற ரகசியத்தை சொல்லிவிட வேண்டும் என நினைக்கிறார். அந்த ஆத்திரத்தில் யாரிடமும் சொல்லாமல் , கோபி - பாக்கியா சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ராதிகா வீட்டுக்கு செல்கிறார்.

    இதையும் படிங்க.. மார்ச் 31க்குள் இதை செய்து விடுங்கள்.. Sukanya Samriddhi Yojana, PPF, NPS திட்டங்களின் முக்கிய அப்டேட்!

    அதற்குள் வீட்டில் இருப்பவர்கள் தாத்தாவை காணவில்லை என தேடுகின்றன. ஒரு காலில் நடக்க முடியாமல் நடந்து, ராதிகா வீட்டுக்கு செல்கிறார் கோபி அப்பா. ராதிகா வீட்டில் கோபியும் இருக்கிறார். அடுத்து என்ன நடக்கும்? ராதிகாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விடுமா? கோபி வழக்கம் போல் எஸ்கேப் ஆகிவிடுவாரா? என பல கேள்விகளுக்கு நாளைய எபிசோடில் விடை கிடைக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, TV Serial Promos, Vijay tv

    அடுத்த செய்தி