Neha Menon: உருவ கேலியால் 8000 பேரை பிளாக் செய்த பாக்கியலட்சுமி இனியா!

நேகா மேனன்

ஏதாவது நெகட்டிவ் கமெண்டுகளை பார்த்தால், அவர்களுடைய கணக்கை பிளாக் செய்துவிடுவேன்.

  • Share this:
    தான் இதுவரை 8000 அக்கவுண்டுகளை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்திருப்பதாக சீரியல் நடிகை நேஹா மேனன் தெரிவித்துள்ளார்.

    நடிகை ராதிகா சரத்குமாரின் வாணி ராணி, சித்தி 2, பாக்கியலட்சுமி தொடர் என பிரபலமான சீரியல்களில் நடித்து, ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை நேஹா மேனன். இந்நிலையில் தான் எவ்வாறு உருவ கேலியை கடந்து வந்தேன் என்பதை சமூக வலைதள ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

    chithi 2 baakiyalakshmi Serial Actress Neha Menon Mother gives birth to a baby girl after 19 years
    நேகா மேனன்


    அதில் “நான் Chubby மற்றும் உயரமும் குறைந்து இருப்பேன். சில காட்சிகளில் எனக்கே என்னடா இவ்வளவு குண்டா தெரிகிறோம் என்றிருக்கும். ஆனால், நாம் உடுத்தும் உடைகள் மூலம் அதனைக் கட்டுப்படுத்தலாம். நான் சந்தித்த டிசைனர்கள் வழியே நான் கற்றுக்கொண்ட இரண்டு விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

    என்னைப்போல் இருப்பவர்கள், நீளமான கோடு போட்ட உடைகள் உடுத்தினால், உடல் எடை குறைந்தது போலவும் உயரமாக இருப்பது போலவும் தோற்றம் பெறுவீர்கள். மேலும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட உடைகளுக்கு, வெயிஸ்ட் பெல்ட் உபயோகிக்கலாம். அதேபோல எப்போதுமே நான் எல்போ ஸ்லீவ் வைத்துதான் உடுத்துவேன். இந்த டிப்ஸ்களை எப்போதும் நான் பின்பற்றி வருகிறேன்.



     




    View this post on Instagram





     

    A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய பிறகுதான் உருவ கேலி என்கிற விஷயம் எனக்குத் தெரிய வந்தது. ஒவ்வொரு கமென்ட்டை பார்க்கும்போதும் ஆரம்பத்தில் மிகவும் வேதனை அடைந்தேன். அம்மாவிடம் தான் என் வேதனைகளைக் கொட்டுவேன். எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என் அம்மா தான். நம்மைப் பற்றி கமெண்ட் செய்பவர்களுக்கு நாம் எதனால் எடை போட்டோம், அதனால் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம் என்பதெல்லாம் தெரியாது.



     




    View this post on Instagram





     

    A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)






    ஏதாவது நெகட்டிவ் கமெண்டுகளை பார்த்தால், அவர்களுடைய கணக்கை பிளாக் செய்துவிடுவேன். அதுபோல கிட்டத்தட்ட 8000 கணக்குகளை பிளாக் செய்திருக்கிறேன். மெசேஜுகளை பார்த்து விட்டு அத்தனையையும் அழித்துவிடுவேன். இப்படி செய்தால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அந்த அளவிற்கு மனஅழுத்தத்திற்கு சென்றேன். இதிலிருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆனது.



     




    View this post on Instagram





     

    A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)






    நம் மேல் நாம் முதலில் அன்பு காட்டவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். நான்கு நல்ல விதமான கமென்ட் வந்தாலும் அதனை பாசிட்டிவ்வாக ஏற்றுக்கொள்கிறேன். எனக்காக நேரம் செலவழிக்க கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் என்னைத் தப்பாகப் பேசுபவர்களைக் கண்டு பயப்படுவேன். ஆனால், இப்போது அப்படி அல்ல. மனக்குழப்பத்தை தகர்த்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: