• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆண் குழந்தையை பெற்றெடுத்த பாக்கியலட்சுமி ஜெனிபர் - குவியும் வாழ்த்துகள்!

ஆண் குழந்தையை பெற்றெடுத்த பாக்கியலட்சுமி ஜெனிபர் - குவியும் வாழ்த்துகள்!

ஜெனிபர்

ஜெனிபர்

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வந்த ஜெனிபருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  • Share this:
    விஜய் டிவியில் ப்ரைம் டைமிங் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் முக்கியமானது. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடிகை சுசித்ரா ஷெட்டி, பாக்கியலட்சுமியாக நடித்து வருகிறார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகையும் டான்சருமான ஜெனிபர். தமிழ் சினிமாவில் பல பாடல்களுக்கு நடனமாடியுள்ள இவர், சன் டிவியில் ஒளிப்பரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ், கலர்ஸ் தமிழில் அம்மன் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

    இரண்டாவது முறை கர்ப்பமான ஜெனிபர், சில மாதங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகினார். கர்ப்ப கால படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்ட அவர், அவ்வப்போது நடனமாடி அந்த வீடியோவையும் பதிவிட்டார். வளைகாப்பு நிகழ்வில் நடனமாடிய போது எடுத்த வீடியோவையும் பகிர்ந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.




    இந்நிலையில் தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள விஷயத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் ஜெனிபர். இதையடுத்து அவருக்கு, ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: