Home /News /entertainment /

கோபியின் நிஜமுகத்தை தெரிந்து கொண்ட அந்த நபர்.. பாக்கியலட்சுமியில் அதிரடி ட்விஸ்ட்!

கோபியின் நிஜமுகத்தை தெரிந்து கொண்ட அந்த நபர்.. பாக்கியலட்சுமியில் அதிரடி ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் இந்த முறையாவது கோபி மாட்டுவாரா?

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நிஜம் முகம், வீட்டில் தங்க வந்திருக்கும் கதிருக்கு தெரிந்து விட்டது. யாருக்கும் கேட்காது என கோபி தைரியமாக ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததை கதிர் கேட்டுவிட்டார். இது தான் வரும் வாரத்தில் பாக்கியலட்சுமி சீரியலின் ஹைலைட் ட்விஸ்ட்.

    பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மூர்த்தியின் மொத்த குடும்பமும் இப்போது சென்னைக்கு வந்துள்ளனர். அதாவது, கோபியின் அப்பா ராமமூர்த்தி பிறந்த நாளுக்காக எல்லோரும் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் இப்போது பாக்கியா வீட்டில் தான் தங்கியுள்ளனர். இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பாக்கியாவும் தனமும் ஒன்றாக சேர்ந்து போய் ராதிகாவை அழைத்து வந்தனர். ராதிகாவும் வருங்கால கணவருடன் கட்டாயம் வந்து விடுகிறேன் என சொல்லிவிட்டார்.

    சரவணன் தங்கச்சி பார்வதி உயிருக்கு ஆபத்து! ’ராஜா ராணி 2’வில் எதிர்பார்க்காத திருப்பம்!

    இப்படி இருக்கையில் ராதிகா கோபியை ஃபர்த்டேவுக்கு கூப்பிட கோபியின் நிலைமை ஐயோ பாவம் ஆனது. ராதிகாவுடன் வீட்டுக்கு வந்தாலும் மாட்டிக் கொள்வார், ராதிகா வரும் சமயத்தில் வீட்டில் இருந்தாலும் மாட்டிக் கொள்வார். இந்த கோபத்தை ராதிகாவிடம் காட்ட முடியாத கோபி, பாக்கியாவிடம் காட்டுகிறார். ராதிகாவை ஏன் அழைத்தாய்? என சண்டையும் போடுகிறார். இப்படி இருக்கையில், வீட்டுக்கு வந்திருக்கும் தனம், மூர்த்தி, கதிருக்கு கோபி மீதும் அவரின் நடவடிக்கை மீதும் சந்தேகம் வருகிறது. அதே போல் ராமமூர்த்திக்கும் கோபிக்கும் இடையில் பிரச்சனை இருப்பதையும் அவர்கள் தெரிந்து கொள்கின்றனர்.

    ஒரே நாளில் சூர்யவை மாற்றிய வெண்ணிலா.. காற்றுக்கென்ன வேலி சீரியலில் சரியான ட்விஸ்ட்!

    இப்படி இருக்கையில், அடுத்த வாரம், பாக்கியலட்சுமி சீரியலுக்கான புரமோ வெளியாகியுள்ளது. ராதிகா கோபிக்கு கால் செய்து, பிறந்த நாள் விழாவுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என தொல்லை செய்கிறார். கோபி ஏதோ ஏதோ சொல்லி சமாளிக்கிறார். கடைசியில் கோபி வரேன் என்று சொல்லிவிடுகிறார். இந்த பக்கம், தனது நண்பருக்கு கால் செய்து இதுப்பற்றி புலம்புகிறார். அதுமட்டுமில்லை, இந்த பிறந்த நாள் நிகழ்ச்சி கண்டிப்பாக நடக்காது, நடக்கவும் விட மாட்டேன்  என பேச, அதை கதிர் கேட்டு விடுகிறார். இதுதான் ஹைலைட்டே.அடுத்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் பல ட்விஸ்டுகள் அரங்கேற போவது இந்த புரமோ மூலம் தெரிய வந்துள்ளது.

    இந்த முறையாவது கோபி மாட்டுவாரா? இல்லை வழக்கம் போல் எஸ்கேப் ஆகிவிடுவாரா? என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி