Home /News /entertainment /

பொறுமையிழந்து எரிமலையாய் வெடித்த பாக்கியலட்சுமி… ரசிகர்களை கவரும் புதிய ப்ரொமோ

பொறுமையிழந்து எரிமலையாய் வெடித்த பாக்கியலட்சுமி… ரசிகர்களை கவரும் புதிய ப்ரொமோ

பாக்கிய லட்சுமி புதிய ப்ரொமோவில் வரும் காட்சி.

பாக்கிய லட்சுமி புதிய ப்ரொமோவில் வரும் காட்சி.

Baakiyalakshmi Promo : ‘கோபி பெரிய நடிகர், சொந்த குடும்பத்தையே ஏன் ஏமாத்துனீங்க, இதுல உங்களுக்கு என்னங்க கெடச்சுது’ என்று குடும்பத்தார் முன்னிலையில் கோபி மீது எரிமலையாய் வெடிக்கிறார் பாக்கியலட்சுமி.

    பாக்கியலட்சுமி மெகா தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரொமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் கடந்த 2 வாரமாக சீரியலில் எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறி  வருகின்றன. கோபி பற்றிய உண்மை முதலில் ராதிகாவுக்கு தெரிந்தது. பின்பு கோபி - ராதிகாவுக்கு இடையே சண்டை. அடுத்த சில நாட்களில் ராஜேஷ் கோபி வீட்டுக்கு வந்து சண்டை போடுகிறார். இந்த குழப்பத்தில் வீட்டில் இருக்கும் எல்லோரும் கோபிக்கு ஃபோன் செய்தனர்.

    அதன் பின்பு கோபிக்கு கார் விபத்து நிகழ அவர் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனார். இந்த நேரத்தில் கோபியை பார்க்க ராதிகா ஆஸ்பிட்டல் வருகிறார். இருவரும் பேசியதை பாக்கியா பார்த்து விட்டார்.

    பண்ண தப்புக்கு கிடைத்த தண்டனை.. பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!

    இப்போது வீட்டில் புயல் அடிக்கிறது. கோபி பற்றிய உண்மையை மொத்த குடும்பத்திடமும் பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கிறார். இதன் பின்பு என்ன ஆகும். கோபி - பாக்கியா பிரிந்து விடுவார்களா? ராதிகா - கோபி திருமணம் நடக்குமா? என பல கேள்விகளுடன் ரசிகர்கள் ஆவலாக  வெயிட்டிங்.,

    இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான புரொமோ இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. எரிமலையாய் வெடித்த பாக்கிய லட்சுமி என ஆரம்பிக்கிறது ப்ரொமோ…



    ‘எல்லாத்துக்குமே காரணம் ராதிகாதான அத்தை’ என்று பாக்கியலட்சுமி சொல்ல, கோபியின் முகம் அதிர்ச்சியில் உறைகிறது.

    ‘கோபி பெரிய நடிகர், சொந்த குடும்பத்தையே ஏன் ஏமாத்துனீங்க, இதுல உங்களுக்கு என்னங்க கெடச்சுது’ என்று குடும்பத்தார் முன்னிலையில் கோபி மீது எரிமலையாய் வெடிக்கிறார் பாக்கியலட்சுமி.

    வீட்டுக்கு வந்த புது வரவு.. மகிழ்ச்சியில் மைனா நந்தினி - யோகேஷ்!

    கடைசியா சந்தோஷமா வாழுங்க கோபி என்று கூறிவிட்டு நடையைக் கட்டுகிறார் கதாநாயகி. இதனால் இந்த வாரம் தொடரில் என்னென்ன நடக்குமோ என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி