• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யாரு சார் சொன்னா பாக்கியாவால முடியாதுன்னு.... இல்லத்தரசிகளின் ரோல் மாடல்!

யாரு சார் சொன்னா பாக்கியாவால முடியாதுன்னு.... இல்லத்தரசிகளின் ரோல் மாடல்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

கேட்ட பணத்தை விட அதிகம் லாபமே பாக்கியாவுக்கு கிடைக்கிறது. வெற்றி மகிழ்ச்சியில் கெத்தாக நடந்து வருகிறார்.

  • Share this:
    கோபியின் முகத்தில் கரியைப் பூசி இல்லத்தரசிகளின் ரோல் மாடலாக உயர்ந்து நிற்கிறார் பாக்கியா.. இதுக்குறித்து தான் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரெட் சீரியலாக உள்ளது. சரியாக படிக்காத குடும்பத்தலைவி, தன் குடும்ப உறுப்பினர்களுக்காக செய்யும் தியாகங்கள், படும் கஷ்டங்கள் மற்றும் அவமானங்கள் உள்ளிட்டவை தான் இந்த சீரியலின் ஒன்லைன். கணவன், தோளுக்கு மேல் வளர்ந்த 3 பிள்ளைகள், ஒரு மருமகள் மற்றும் மாமனார் & மாமியார் உள்ளிட்டோரை தனி ஒரு ஆளாக கவனித்து கொண்டு சுயதொழில் செய்யும் முயற்சியில் போராடி வரும் தாயாக பாக்கியா இருக்கிறார்.

    குறிப்பாக பாக்கியவாக நடிக்கும் நடிகை சுசித்ராவை மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் சக அம்மாவாக, மாமியாராக, மருமகளாக பார்க்க தொடங்கினர். சீரியல் என்றாலே பெண்கள் தான் அதிகம் பார்ப்பார்கள் என்ற பேச்சும் உண்டு. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலை ஏராளமான பெண்களே விரும்பி பார்க்க தொடங்கினர். குடும்பத்திற்காகவே வாழும் பாக்கியாவை கணவர் கோபி, முதல் மகன் செழியன் எல்லோரும் ஏமாற்றுகின்றனர். ஆனாலும் தனக்கான அடையாளத்தை தேடி கொள்ள நினைத்து சமையல் ஆர்டர், மசாலா பொடி விற்பது போன்ற சுயதொழிலை செய்து வருகிறார்.

    ஏற்கெனவே சாதித்து விட்ட பாக்கியாவுக்கு வீட்டில் கணவர் மற்றும் பிள்ளைகளிடம் மரியாதை இல்லை. அதற்கு காரணம் பாக்கியாவுக்கு இந்த நாள் தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் மிகப் பெரிய சமையல் ஆர்டர் பாக்கியாவுக்கு கிடைக்கிறது. கோபி மிகப் பெரிய பண தேவை இருப்பதாக கூற அவருக்கு உதவ வேண்டி, இந்த சமையல் ஆர்டரை எடுக்கிறார் பாக்கியா. ஆனால் வழக்கம் போல் பாக்கியாவால் இதை செய்ய முடியாது என்று கோபி, செழியன், இனியா, மாமியார் கிண்டல் செய்ய பாக்கியாவுக்கு ஜெனி, எழில், அம்ரிதா துணை நிற்கின்றனர். பாக்கியாவின் தன்னம்பிக்கை கண்டிப்பாக வெற்றி தரும் என்பது போல் சமையல் ஆர்டரில் ஜெயித்து கோபி முகத்தில் கரி பூசுகிறார் பாக்கியா.



    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சமையலை சரியான நேரத்தில் முடித்து அதை தொழிலதிபர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கிறார். அதை சாப்பிட்டு பார்த்த ராஜசேகர், சமையல் பிரமாதமாக இருப்பதாக பாராட்டுகிறார். கேட்ட பணத்தை விட அதிகம் லாபமே பாக்கியாவுக்கு கிடைக்கிறது. வெற்றி மகிழ்ச்சியில் கெத்தாக நடந்து வருகிறார். கண்டிப்பாக பாக்கியா ரோல் இல்லத்தரசிகளின் ரோல் மாடல் தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: