Home /News /entertainment /

அசிங்கப்படுத்திய கோபி.. சுயமரியாதை பாக்கியா எடுக்கும் புதிய முயற்சி!

அசிங்கப்படுத்திய கோபி.. சுயமரியாதை பாக்கியா எடுக்கும் புதிய முயற்சி!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

செழியன், ஈஸ்வரி பாட்டி, இனியா எல்லோரும் பாக்கியாவிடம் பேசுவது இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான அதிரடி புரமோ வெளியாகியுள்ளது. சுயமரியாதை பாக்கியா தனது குடும்பத்திற்காக மிகப் பெரிய முடிவை எடுக்கிறார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு சென்ற பிறகு வீட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பணம் பிரதான காரணமாகிறது. இனியாவுக்கு ஃபீஸ் கட்டுவதில் தொடங்கி கரண்ட்  பில் வரை குடும்ப செலவை பார்த்து திணறுகிறார் பாக்கியா. இந்த நேரத்தில் தான் கோபி பாக்கியாவுக்கு ஃபோன் செய்து அவமானப்படுத்துகிறார். வீட்டு செலவுகளை நான் பார்த்து கொள்கிறேன் பில்லை மட்டும் அனுப்பு என்கிறார். ஆனால் பாக்கியா அதை அவமானமாக பார்க்கிறார்.

    மீண்டும் மைக்கை பிடிக்கும் நக்‌ஷத்ரா நாகேஷ்...அம்மணி பயங்கர ஹேப்பி!

    இதை சரிசெய்ய அடுத்த போராட்டத்திற்கு பாக்கியா தயாராகிறார். அதாவது சமையல் ஆர்டர் எடுக்க நியூஸ் பேப்பரில் வரும் விளம்பரத்தை பார்க்கிறார். அந்த விளம்பரத்தில் இருக்கும் விவரங்களை பார்த்து ஆன்லைனில் அப்ளை செய்கிறார். அதற்கு ஜெனி உதவி செய்கிறார். கடைசியில் அந்த சமையல் ஆர்டருக்காக நடக்கும் போட்டியிலும் பாக்கியா கலந்து கொள்கிறார்.

    சிரித்தப்படியே தலைகுனிந்த மொமண்ட்.. ரவீந்தர் -விஜே மகாலட்சுமி திருமண வீடியோ இதோ!

    இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. 15 நிமிடத்தில் சூப்பரான டிஷ் செய்து அசத்தும் போட்டியாளருக்கு அந்த சமையல் ஆர்டர் தரப்படும் என அறிவிக்கப்படுகிறது. பாக்கியாவும் அதை செய்து முடிக்கிறார். அடுத்து என்ன நடக்கும்? பாக்கியா அந்த போட்டியில் வெற்றி பெற்று ஆர்டரை கைப்பற்றுவரா? என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.



    சுயமரியாதை பாக்கியா இதை தனது கவுர  பிரச்சனையாக பார்க்கிறார். இந்த ஆர்டரை எப்படியாவது எடுத்து வீட்டு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என நினைக்கிறார். மொத்தத்தில் எந்த விதத்திலும்  கோபியை நம்பி இனி பாக்கியாவும், அவரின் குடும்பமும் இல்லை என்பதை புரிய வைக்கவே பாக்கியா இந்த முயற்சியில் இறங்குகிறார். ஏற்கெனவே வீட்டில் செழியன், ஈஸ்வரி பாட்டி, இனியா எல்லோரும் பாக்கியாவிடம் பேசுவது இல்லை. இப்படி இருக்கையில் எதாவது செய்து வீட்டில் பணப்பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என பாக்கியா நினைக்கிறார். அதற்கான முதல் முயற்சி தான் இந்த கார்ப்ரேட் சமையல் ஆர்டர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி