• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அதே சிரிப்பு.. அதே டான்ஸ்.. வளைக்காப்பு நிகழ்ச்சியில் தனது பாடலை மறக்காத பாக்கியலட்சுமி ஜெனிபர்!

அதே சிரிப்பு.. அதே டான்ஸ்.. வளைக்காப்பு நிகழ்ச்சியில் தனது பாடலை மறக்காத பாக்கியலட்சுமி ஜெனிபர்!

பாக்கியலட்சுமி ஜெனிபர்

பாக்கியலட்சுமி ஜெனிபர்

குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் ஜெனிபர்.

  • Share this:
    விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிபர், தனக்கு அண்மையில் நடைபெற்ற சீமந்தம் விழாவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற குத்துப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

    பாக்யலட்சுமி சீரியல் பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நேரத்தில், அந்த சீரியலில் ராதிகாவாக நடித்த ஜெனிஃபர், திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ஏன் சீரியலில் இருந்து விலகினார் என ரசிகர்களுக்கு அப்போது தெரியவில்லை. இது குறித்து சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "முதலில் ராதிகா கதாப்பாத்திரம் மிகவும் அமைதியானவள் என்கிற ரீதியில் சொல்லப்பட்டது.ஆனால், கதை பயணிக்கும்போது திடீரென நெகடிவாக காண்பிக்கத் தொடங்கினார்கள். இனி வரும் காலங்களில் ராதிகா கதாப்பாத்திரம் வில்லியாக மாற இருப்பதால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் சீரியலில் இருந்து விலகிவிட்டேன் எனக் கூறினார். இது உண்மையா இருக்குமோ என ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில், திடீரென மற்றொரு வீடியோவில் இன்னொரு சர்பிரைஸான காரணத்தை தெரிவித்தார்.

    அந்த வீடியோவில், "பாக்கியலட்சுமி சீரியலில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ராதிகா கதாப்பாத்திரத்துக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. ரசிகர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கையை இப்போது உணர்கிறேன். இந்த நேரத்தில் என் ரசிகர்களான உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். நான் இப்போது தாய்மை அடைந்திருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

    அவருக்கு இப்போது சீமந்தம் நடைபெற்றிருக்கிறது. அண்மையில் சீமந்தம் முடிவடைந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற குத்துப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், விரைவில் குழந்தை பெற்றெடுக்க உள்ள ஜெனிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.



    மேலும், உங்களைப்போலவே பிறகும் குழந்தையும் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளனர்.நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், இதுபோன்ற குத்தாட்டத்தை தவிர்க்கலாமே என்றும் சிலர் அன்போடு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் ஜெனிபர்.

    இந்தமுறை நெகடிவ் ரோல்கள் இல்லாமல், பாசிடிவ்வான ரோல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். ராதிகா கேரக்டர் நல்ல அறிமுகத்தை கொடுத்தாலும், நெகடிவ் ரோலாக மாற்றப்படுவதில் உடன்பாடில்லை என தெரிவித்திருந்த ஜெனிபர், முதலில் கூறியதுபோலவே கேரக்டர் சென்றிருந்தால் தொடர்ந்து நடித்திருப்பேன் எனவும் விளக்கம் அளித்திருந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: