Home /News /entertainment /

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய பிரபலம் விலகல்?

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய பிரபலம் விலகல்?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலின் கதைப்படி செழியன் பாக்கியாவின் மூத்த மகன் . ஆரம்பத்தில் இவருக்கும் ஜெனிக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருந்தது

    பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மூத்த மகனாக செழியன் ரோலில் நடித்து வந்த ஆர்யன் சீரியலில் இருந்து திடீரென்று விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் இணையத்தில் இதுக் குறித்த தகவல் வேகமாக பரவி வருகிறது.

    வெள்ளித்திரையைக் காட்டிலும் சின்னத்திரை நடிகர் நடிகைகளைப் பற்றி ரசிகர்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருவதை தற்போது பார்க்க முடிகிறது. குறிப்பாக அவர்களுக்கு பிடித்தமான சீரியல் நடிகர்கள் என்றால் போதும் அவர்களின் இன்ஸ்டா பக்கத்தை ஃபாலோ செய்வது, அவர்களின் சொந்த ஊர், படிப்பு, குடும்பம் பற்றிய தகவல்களை தேடுவது என சின்னத்திரை நடிகர்கள் இன்று ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்து விடுகின்றனர். அந்த வகையில், பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் ரோலில் நடிக்கும் நடிகர் வேலு லட்சுமணன் ஃபீல்ட்டுக்குள் வந்த சில ஆண்டுகளிலே ரசிகர்கள் மனதை கவர்ந்தார். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். ஆன்சம் லுக்கில் அழகாக இருக்கும் செழியனுக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃபேன்ஸ்.

    இதையும் படிங்க.. எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம்.. அபி டெய்லர் சீரியல் ரேஷ்மா சொன்ன விஷயம்!

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் லீட் ரோலுக்கு அடுத்தப்படியாக துணை நடிகராக நடித்தார். இந்த ரோல் நல்ல ரீச் கொடுக்க, அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக கமிட் ஆனார்.
    சென்னை சார்ப்பாக நடத்தப்பட்ட பல மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளார். இவருக்கும் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானாவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Aryan (@aryan_offl)






    திருமணத்திற்கும் பிறகும் இருவரும் தங்களுடைய கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியலின் கதைப்படி செழியன் பாக்கியாவின் மூத்த மகன் . ஆரம்பத்தில் இவருக்கும் ஜெனிக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருந்தது. தற்போது செழியனுக்கு சீரியலில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. இதை அவரே உணர்ந்தாரா அல்லது அவரை ரசிகர்கள் அடிக்கடி ஹீரோ மெட்டிரியல் நீங்க ஏன் சைடு ரோலில் நடிக்கிறீர்கள் என்று கேட்பதால் இந்த முடிவை எடுத்தாரா? என தெரியவில்லை. ஆனால் திடீரென்று ஆர்யன் சீரியலில் இருந்து விலகி இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுக் குறித்து சேனல் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி