Home /News /entertainment /

பாக்கியலட்சுமி இனியாவை விடாமல் சுற்றும் உருவகேலி.. இந்த முறை என்ன செய்தார் தெரியுமா?

பாக்கியலட்சுமி இனியாவை விடாமல் சுற்றும் உருவகேலி.. இந்த முறை என்ன செய்தார் தெரியுமா?

பாக்கியலட்சுமி இனியா

பாக்கியலட்சுமி இனியா

நேஹா மேனனுக்கு தற்போது 19 வயது ஆகிறது. என்றாலும் வயதுக்கு பொருத்தமில்லாத உடல் எடையுடன் காணப்படுவதால் அவ்வப்போது நெட்டிசன்களின் கிண்டல்களுக்கு ஆளாகிறார்.

    தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமாக இருந்து வருபவர் நடிகை நேஹா மேனன். தற்போது இவர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியலான பாக்கியலட்சுமியில் இனியாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக உள்ளார். தவிர சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலிலும் செவந்தியாக நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை நேஹா மேனன் பிறந்தது, வளர்ந்தது, படித்தது என எல்லாமே தலைநகர் சென்னை என்பதால் சிறுவயதில் இருந்து இயல்பாகவே சினிமாத்துறை மீதும், நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்து உள்ளார்.

    கடந்த 2012-ல் டி.கே.எஸ் நிமேஷ் இயக்கத்தில் சன் டிவி-யில் ஒளிபரப்பான பிள்ளை நிலா என்ற சீரியல் மூலம் முதன் முதலாக சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். இந்த சீரியலில் நிலா என்ற கேரக்டரில் நடித்து நேஹா மேனன் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலை தொடர்ந்து பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், நிறம்மாறாத பூக்கள், தமிழ் செல்வி உட்பட பல சீரியல்களில் நடித்தார். இருப்பினும் பெரும்பாலான சின்னத்திரை ரசிகர்களுக்கு இவர் பரிச்சயமானது தேனு என்ற கேரக்டர் மூலம் தான். நடிகை ராதிகாவுடன் இணைந்து நடித்த வாணி ராணி சீரியலில் தேனு ரோலில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகளை பெற்றார்.

    சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் கால் பதித்த இவர் யட்சன், ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக சுமார் 10 வருடங்களுக்கு முன் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்த நேஹா மேனனுக்கு தற்போது 19 வயது ஆகிறது. என்றாலும் வயதுக்கு பொருத்தமில்லாத உடல் எடையுடன் காணப்படுவதால் அவ்வப்போது நெட்டிசன்களின் கிண்டல்களுக்கு ஆளாகிறார். ஏற்கனவே பல இன்ஸ்டா யூஸர்கள் இவரை உருவ கேலி செய்ததால் சுமார் 8,000 பேர் வரை பிளாக் செய்ததாக கூறி இருந்தார் நேஹா.

    ஒருகட்டத்தில் இதனால் மனஅழுத்தத்தில் சிக்கி தவித்த இவர், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பினார். இப்போதெல்லாம் இவரது உருவத்தை கேலி செய்யும் வகையில் யாராவது பேசினால் அல்லது கேள்வி கேட்டால் உடனே பதிலடி கொடுத்து வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நேஹாவிடம் வழக்கம் போல ஒரு நெட்டிசன் அவரது எடை எவ்வளவு என்று கேட்க அவரை வறுத்து தள்ளிவிட்டார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)






    எப்போதும் ஒருவரின் எடை பற்றியே ஏன் கவலைப்படுகிறீகள், என் எடையை தெரிந்து கொள்வது என்ன ஒரு பொதுஅறிவா.? இல்லையே.. பின்னர் அதை தெரிந்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். எடை மூலம் என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அப்படி ஒன்றும் என்னை தெரிந்து கொள்ள வேண்டாம். இது போன்ற கேள்விகள் எழுப்படுவது இது முதல் முறை அல்ல என்று கோபமுடன் கூறி உள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி