குழந்தை நட்சத்திரமாக தோன்றி சின்னத்திரையில் அடைந்த புகழ்... உருவ கேலிகளால் உடையாத பாக்கியலட்சுமி இனியா!

பாக்கியலட்சுமி இனியா

சோஷியல் மீடியாவில் இவரின் பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கினர்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடிக்கும் நேகா மேனன் பல்வேறு உருவ கேலிகளை உடைத்தெறிந்து சின்னத்திரையில் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

  சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரங்கள் வரவு குறைவு தான். அப்படி வந்தாலும் அவர்கள் அந்த அளவுக்கு ரீச் ஆவார்களா என்றால் சந்தேகம் தான். ஆனால் அந்த வரிசையில் புதிய முத்திரையை படைத்தவர் நடிகை நேகா மேனன். சன் டிவியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலில் தேனு கேரக்டரில் அறிமுகாகி நடிப்பிலும் பேச்சிலும் கலக்கினார். ராதிகாவின் கடைசி மகளாக புத்திசாலி மகளாக நடித்திருப்பார். இவரின் துரு துரு பேச்சு, நடிப்பு ராதிகாவுக்கே மிகவும் பிடிக்குமாம். குறிப்பாக இவருக்கும் ராதிகாவுக்கு இடையேயான சீன்கள் அனைவரும் ரசிக்கும் படியாகவே இருக்கும். இந்த சீரியலுக்கு பின்பு இனியா, பெரும்பாலான ரசிகர்களால் தேனு தேனு என்றே அழைக்கப்பட்டார்.

  அந்த சீரியல் முடிந்த பிறகு, இவரை வேறு சீரியல்களில் பார்க்க முடியவில்லை. நீண்ட இடைவேளைக்கு பின்பு பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய சித்தி 2 சீரியலில் மீண்டும் இவரைக் காண முடிந்தது. சின்ன குழந்தையாக இருந்த அவர் வளர்ந்திருந்தார். சற்று குண்டாகவும் இருந்தார்.உடனே சோஷியல் மீடியாவில் இவரின் பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கினார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வருகிறார்.இதற்கிடையில் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் இனியா கதாபாத்திரத்தில்ம் பள்ளி செல்லும் மாணவி. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து வருகிறார்.

  வாணி ரானி ஷூட்டிங் ஸ்பாட்டில்


  இந்நிலையில், அண்மைக்காலமாக இவரை இன்ஸ்டா போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் ட்ரோல் செய்வது அதிகமானது. குண்டான உடல் தோற்றத்தை வைத்து அவ்வப்போது இவரை இன்ஸ்டாவில் நிறைய பேர் ட்ரோல் செய்ததால் இவர் பல கணக்குகளை இன்ஸ்டா பக்கத்தில் பிளாக் செய்ததாகவும்  கூறியிருந்தார். வீட்டுக்கு ஒரே மகளான நேகாவுக்கு சமீபத்தில் தான் தங்கை உறவு கிடைத்தது. அவரின் அம்மாவுக்கு பல வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தானே அம்மாவாக உணர்வதாக தங்கையின் புகைப்படத்தை உணர்வுபூர்வமாக பதிவிட்டிருந்தார். பல்வேறு உருவ கேலிகளை கடந்து, அதை சற்றும் பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்தமான வேலைகளை செய்து வருகிறார். ஒருபக்கம் தனது கல்லூரி படிப்பையும் தொடர்கிறார். இதற்கிடையில் விளம்பரங்கள், சீரியல்களிலும் நடித்து வருகிறார். கண்டிப்பாக நேகா மேனன் இன்றைய டீன் ஏஜ் பெண்களுக்கு ரோல் மாடல் தான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: