• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • திருமணம்.. சீரியலிருந்து விலகல்.. பாக்கியலட்சுமி இனியாவை பாடாய்படுத்தும் வதந்திகள்!

திருமணம்.. சீரியலிருந்து விலகல்.. பாக்கியலட்சுமி இனியாவை பாடாய்படுத்தும் வதந்திகள்!

பாக்கியலட்சுமி இனியா

பாக்கியலட்சுமி இனியா

சில தினங்களாக நேகாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் பல வதந்திகள் பரவி கொண்டிருக்கின்றன

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடிக்கும் நேகா மேனன் பற்றி சமீபகாலமாக ஏகப்பட்ட சர்ச்சைகள் சுற்றி வருகின்றன. இதனால் அவரே சில தகவல்கள் உண்மை இல்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

  சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரங்கள் வரிசையில் புதிய முத்திரையை படைத்தவர் நடிகை நேகா மேனன். சன் டிவியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலில் தேனு கேரக்டரில் அறிமுகாகி நடிப்பிலும் பேச்சிலும் கலக்கினார். அந்த சீரியலில் ராதிகாவின் கடைசி மகளாக அதிகம் வாய் பேசும் அறிவாளி பெண்ணாக நடித்திருப்பார். இவரின் துரு துரு பேச்சு, நடிப்பு ராதிகாவுக்கே ரொம்ப பிடிக்குமாம். வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கும் நேகா மேனனுக்கும் இடையேயான சீன்கள் அனைவரும் ரசிக்கும் படியாகவே காட்சி ஆகப்பட்டிருக்கும். இந்த சீரியலுக்கு பின்பு இனியா, பெரும்பாலான ரசிகர்களால் தேனு தேனு என்றே அழைக்கப்பட்டார்.

  அந்த சீரியல் முடிந்த பிறகு, இவரை வேறு சீரியல்களில் பார்க்க முடியவில்லை. தனது பள்ளி படிப்பை தொடர்ந்து. கல்லூரியில் சேர்ந்த பிறகு நீண்ட இடைவேளைக்கு பின்பு பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய சித்தி 2 சீரியலில் மீண்டும் இவரைக் காண முடிந்தது. நேகா மேனன் கொஞ்சம் வெயிட் போட்டு இருந்ததால் உடனே சோஷியல் மீடியாவில் இவரின் பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கினார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்தார்.

  இதற்கிடையில் தான் கொரோனா முதல் அலை வீசிய நேரத்தில் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் இனியா கதாபாத்திரத்தில் பள்ளி செல்லும் மாணவி. அம்மாவுக்கு எதுவும் தெரியாது என நினைக்கும் மகள் ரோல். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து வருகிறார் நேகா மேனன். சில மாதங்களுக்கு முன்பு இவரை இன்ஸ்டா போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் ட்ரோல் செய்வது அதிகமானது. குண்டான உடல் தோற்றத்தை வைத்து அவ்வப்போது இவரை இன்ஸ்டாவில் நிறைய பேர் ட்ரோல் செய்தும் வந்தனர். ஆனால் இந்த பிரச்சனை எல்லாம் மறக்கடிக்கும் வகையில் நேகாவுக்கு சமீபத்தில் தான் தங்கை உறவு கிடைத்தது. அவரின் அம்மாவுக்கு பல வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்தது. தனது தங்கைக்கு அம்மாவாகி பாசத்துடன் கவனித்துக் கொள்கிறார் நேகாம். அடிக்கடி தனது தங்கையுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பகிர்வார்.   
  View this post on Instagram

   

  A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)


  இந்நிலையில் கடந்த சில தினங்களாக நேகாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் பல வதந்திகள் பரவி கொண்டிருக்கின்றன. இதை ரசிகர்களும் நேகாவிடம் சமூகவலைத்தளங்கள் மூலம் கேட்டு வந்தனர். இதனால் நொந்து போன நேகா, சமீபத்தில் தனது ஸ்டேட்டஸில் “பெங்களூர் போய் இருந்தது ஒரு குத்தமா நம்பாதீங்க நான் சீரியலை விட்டு விலகவில்லை “என்று வைத்திருந்தார். அதன் பிறகு தான் பாக்கியலட்சுமி ரசிகர்களுக்கு அப்பாடா என்று இருந்தது. சின்னத்திரை நடிகர், நடிகைகள் பற்றி அவ்வப்போது இதுப்பொன்ற வதந்திகள் பரவுவது வழக்கமான ஒன்று தான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: