Home /News /entertainment /

ராதிகாவால் ரோட்டுக்கு வந்த கோபி.. பாக்கியலட்சுமியில் அடுத்த பரபரப்பு!

ராதிகாவால் ரோட்டுக்கு வந்த கோபி.. பாக்கியலட்சுமியில் அடுத்த பரபரப்பு!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

ராதிகா மீது இருந்த காதலால் இன்று கோபி நடுத்தெருவுக்கு வந்து விட்டார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாக்கியலட்சுமி சீரியலில் இன்று வீட்டை விட்டு வெளியே வரும் கோபி,  போக இடம் தெரியாமல் நடுத்தெருவில் நின்று புலம்பி தள்ளுகிறார்.

    ஒட்டுமொத்த சீரியல் டி.ஆர்.பியையும் குத்தகைக்கு எடுத்து வைத்து இருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். கடந்த 2 வாரமாக கோபி - பாக்கியா டைவர்ஸ் காட்சிகள், வீட்டில் நடக்கும் சண்டைகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. ஆனால் எந்த சளிப்பும் ஏற்படாமல் ரசிகர்கள் ஆர்வத்துடன் சீரியல் எபிசோடை பார்த்து வருகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் கோபியின் நடிப்பும், இயக்குனர் வைக்கும் எதிர்பாராத ட்விஸ்டும். பாக்கியாவை தான் கோபி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார் என ஒட்டுமொத்த பாக்கியலட்சுமி ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருந்த சூப்பரான ட்விஸ்டாக  பாக்கியா கோபியை வெளியே அனுப்பினார்.

    சினிமாவை மிஞ்சிய லவ் சீன்.. காற்றுக்கென்ன வேலியில் காதலை சொன்ன வெண்ணிலா!

    இதை கோபியும் எதிர்பார்க்கவில்லை. கடைசியில் ராமமூர்த்தி தாத்தாவும் பாக்கியா பக்கம் நிற்க கதை தலைகீழானது. அவரை எதிர்த்து ஈஸ்வரி அம்மா, செழியன், இனியா யாருமே பேச முடியவில்லை. பாக்கியாவை அசிங்கப்படுத்த சுத்தி சுத்தி பணத்திடம் வந்து நிற்கிறார் கோபி . கடைசியில் வீடு கட்ட செலவான 40 லட்சம் பணத்தை கொடுத்தால் போகிறேன் என்கிறார். இது பாக்கியாவுக்கு கோபி வைத்த செக். ஆனால்  அதையும் பாக்கியா ஒத்துக் கொள்கிறார்.

    அடுத்த லெவலுக்கு சென்ற சூப்பர் சிங்கர் பிரியங்கா! விஷயம் தெரியுமா?

    1 வருடத்தில் 40 லட்சம் பணத்தை சேர்த்து உங்களிடம் தருகிறேன் என்கிறார். மொத்த குடும்பத்திற்கும் ஷாக். கோபியால் நம்ப முடியவில்லை. கடைசியில் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார் கோபி. போக வேற வழி தெரியவில்லை. எங்கே போவது என்று புரியாமல் அவரின் நண்பருக்கு ஃபோன் செய்கிறார். நடு ரோட்டில் நின்றுக் கொண்டு புலம்பி தள்ளுகிறார். ராதிகா மீது இருந்த காதலால் இன்று கோபி நடுத்தெருவுக்கு வந்து விட்டார் என்பதே உண்மை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி