Home /News /entertainment /

என்ன கொடுமை.. கோபி - ராதிகா கல்யாணத்தில் சமைக்க போகும் பாக்கியா!

என்ன கொடுமை.. கோபி - ராதிகா கல்யாணத்தில் சமைக்க போகும் பாக்கியா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியாவுக்கு வரும் முதல் ஆர்டர் என்ன தெரியுமா? கோபி - ராதிகா திருமண சமையல் ஆர்டர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கோபி - ராதிகா கல்யாணத்தில் சமைக்கும் ஆர்டர் பாக்கியாவிடம் வருகிறது. இதுப்போன்ற ஒரு ட்விஸ்டை பாக்கியாவும் சரி கோபியும் சரி எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா கல்யாண வேலைகளை ராதிகாவின் அண்ணன் தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் இருந்தே கோபி - ராதிகாவுக்கு திருமணம் செய்து வைப்பதில் ராதிகாவின் அம்மாவும் அவரின் அண்ணனும் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த நேரம் பார்ர்த்து கோபிக்கு டைவர்ஸ் கிடைத்து விட்டது. அதுமட்டுமில்லை கோபி மொத்த குடும்பத்தையும் பிரிந்து விட்டார். பாக்கியாவுக்கும் எல்லாம் உண்மையும் தெரிந்து விட்டது. அவரும் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். அதுமட்டுமில்லை 1 வருடத்தில் கோபி கேட்ட 60 லட்சத்தையும் தருவதாக கூறிவிட்டார்.

    கணவர் வழியில் செல்லும் ஆல்யா மானசா.. சின்னத்திரையில் பரவும் அந்த விஷயம் உண்மையா?

    அதற்காக கடுமையாக உழைக்க முடிவு எடுக்கிறார். கல்யாண ஆர்டர் எடுத்து சமைக்கலாம் என நினைக்கிறார். அதற்காக நடத்தப்படும் நேர்க்காணலில் கலந்து கொள்கிறார். தொழிலதிபர் ராஜசேகர் பாக்கியாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். மினி ஹாலில் நடக்கும் பார்ட்டியில் முதலில் சமைத்துக் காட்டுங்கள். அதன் பிறகு கல்யாண ஆர்டர் பற்றி யோசிக்கலாம் என்கிறார். இதை பாதி வெற்றியாக நினைக்கிறார் பாக்கியா.

    ரன்பீர் கபூருக்கு தமிழ் சொல்லி கொடுத்து சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் ராஜூ.. மன்னிப்பு கேட்டார்!

    இங்கு தான் ட்விஸ்டே. பாக்கியா எதிர்பார்த்தது போலவே சமையல் ஆர்டர் அவரை தேடி வருகிறது. பாக்கியாவுக்கு வரும் முதல் ஆர்டர் என்ன தெரியுமா? கோபி - ராதிகா திருமண சமையல் ஆர்டர். இப்படியொரு ட்விஸ்டை பாக்கியாவும் சரி கோபியும் சரி எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். நடக்கப்போவது யார் கல்யாணம் என்று தெரியாமலே பாக்கியா அட்வான்ஸ் வாங்கி விடுகிறார். திருமணத்திற்கு சமைக்கவும் தயார் ஆகிறார்.



    அடுத்து சீரியலில் என்ன நடக்கும்? கோபி - ராதிகா கல்யாணம் நடக்குமா, அதில் பாக்கியா சமைப்பாரா? என பல கேள்விகளுடன் ரசிகர்கள் வெயிட்டிங்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி