Home /News /entertainment /

பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா.. தேடி வந்த வாய்ப்பு!

பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா.. தேடி வந்த வாய்ப்பு!

பாக்கியலட்சுமி பாக்கியா

பாக்கியலட்சுமி பாக்கியா

சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பாக்கியா இப்போது வெள்ளித்திரையில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.

    பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா நடிகர் பிரபுதேவாவுடன் திரைப்படத்தில் சேர்ந்து நடிக்கிறார். இந்த தகவலை அவரே புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

    நடுத்தர வயதுள்ள பெண்ணின் கதை மற்றும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவை இல்லத்தரசிகளிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த கான்செப்டில் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் கயல், ரஜினி, பாக்கியலட்சுமி சீரியல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலின் மிகப் பெரிய ஹைலைட்டே பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தான். இவரின் நிஜப்பெயர் சுசித்ரா. மிகவும் வெகுளியான ஒரு குடும்பத்தலைவியாக மூன்று பிள்ளைகளின் தாயாக, கணவர் ஏமாற்றுவதைக் கூட அறியாத வெகுளி பெண்ணாக, சுசித்ரா ஏகப்பட்ட ரசிகர்களை குறைந்த காலத்தில் பெற்றுவிட்டார்.தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து விட்டார்.

    பிரபல சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் வில்லாதி வில்லி வந்தனா!

    தனது 14 வயதிலேயே நடிகர் உபேந்திராவின் தங்கையாக கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி விட்டார். தொடர்ந்து கன்னட சினிமாவில் 15-க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார்.திருமணத்திற்கு பின் மாங்கல்யா என்ற கன்னட சீரியல் மூலம் சின்னதிரையில் அறிமுகமாகி தொடர்ந்து காவியஞ்சலி, ஈஸ்வரி, ராதா ரமணன் உள்ளிட்டவற்றில் நடித்தார்.



    ’கண்ணான கண்ணே’ சீரியலில் வர போகும் முக்கிய திருப்பம்!

    இவரது நடிப்பு திறமையை பார்த்த டைரக்டர் ஏ.எல்.விஜய், தனது சைவம் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் தற்போது பாக்கியாவாக நடித்து ஒவ்வொரு வீட்டிலும் அம்மாக்கள் படும் சிரமங்களை பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Suchitra Ks (@suchitraks)






    சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பாக்கியா இப்போது வெள்ளித்திரையில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். இந்த தகவலை அவரே இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளார். நடிகர் பிரபுதேவாவுடன் சேர்ந்து கன்னட படத்தில் சுசித்ரா நடிக்கிறார். இந்த படத்தின்  ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து படக்குழுவுக்கு நன்றி கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி