ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?

சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?

பாக்கியலட்சுமி பாக்கியா

பாக்கியலட்சுமி பாக்கியா

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் கணவரான கோபி அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பல தமிழ் சேனல்கள் இருந்தாலும் பெரும்பாலான சீரியல்கள், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைக்களத்தில், அரைத்த மாவையே அரைத்து ஒளிபரப்புவதாக குற்றச்சாட்டுகளும் கிண்டலான கமென்ட்டுகளும் பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. ஆனால், சின்னத்திரையில் அவ்வப்போது சில வித்தியாசமான கேரக்டர்கள் மற்றும் கதைக்களங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகும். விதிவிலக்காக அமைந்துள்ள சீரியலில் ஒன்றுதான் விஜய் டிவி யின் பாக்கியலட்சுமி சீரியல்.

  பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பல காலமாக தொடர்ந்து டாப் 5 இடங்களில் இருந்து வருகிறது. இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  கதைகளத்தில் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தும் காட்சிகள் ஒளிபரப்பானதால் ரசிகர்கள் கடுப்பாகி டிஆர்பியில் முதலில் இருந்த பாரதி கண்ணம்மா சீரியல் ட்ரோல் செய்யப்படுவதில் முதல் சீரியலாக மாறிவிட்டது. ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற பல சீரியல்களும் ட்ரோல் மெட்டீரியல் ஆக மாறி வரும் நிலையில், பாக்கியலட்சுமி சீரியலும் அப்படி ஆகிவிடுமோ என்ற சந்தேகமும் அவ்வப்போது ஏற்படுகிறது.

  சிவகாமி அம்மா நினைத்தது நடக்குமா? சந்தியா - சரவணனை பிரிக்க நினைக்கும் அர்ச்சனா!

  இருப்பினும், நடுத்தர வயதுள்ள பெண்ணின் கதை மற்றும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவை இல்லத்தரசிகளிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அது மட்டுமின்றி அவருக்கு எதிரான பாத்திரங்களும் வலிமையாக இருப்பதால் சீரியல் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

  பாக்கியலட்சுமி சீரியலின் மிகப் பெரிய ஹைலைட்டே பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தான். இவரின் நிஜப்பெயர் சுசித்ரா. மிகவும் வெகுளியான ஒரு குடும்பத்தலைவியாக மூன்று பிள்ளைகளின் தாயாக, கணவர் ஏமாற்றுவதைக் கூட அறியாத வெகுளி பெண்ணாக, சுசித்ராவு ஏகப்பட்ட ரசிகர்களை குறைந்த காலத்தில் பெற்றுவிட்டார்.

  அஜித்குமார் பிறந்த நாள் அன்று வலிமை... ஜீ தமிழின் சூப்பர் அப்டேட்!

  சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது வழங்கும் விழாவில், அனைவரின் மனம் கவர்ந்த நாயகி அதாவது பேவரட் நாயகி என்ற விருதை நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி சீரியலுக்காக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விருது வாங்கும் மேடையில் மிகவும் எமோஷ்னலாக பேசி பார்வையாளர்களின் மனதை கரைய செய்து விட்டார்.

  ' isDesktop="true" id="735060" youtubeid="PhIi8025iIc" category="television">

  விருதைப் பெறும் போது மேடையில் பேசிய சுசித்ரா கண்கலங்கினார். மக்கள் அளித்த வரவேற்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். இந்த விருதை என் அம்மாவுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று மிகவும் எமோஷனலாகத் தொடர்ந்தார். உழைத்துக்கொண்டே இருந்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்று என் அம்மா கூறிக்கொண்டே இருப்பார் என்று கண்கலங்க சுசித்ரா தெரிவித்தார்.

  என்னுடைய அம்மா கூறியது இன்று உண்மையாகிவிட்டது. என் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டது ஆனால் அதை பார்ப்பதற்கு அம்மா இப்போது  உயிருடன் இல்லை என்று கண்ணீர்மல்க கூறும் காட்சிகள் ப்ரோமோவில் வெளியாகியுள்ளன.

  தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் எப்படியாவது தன்னுடைய சமையல் தொழிலை விரிவாக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் நேரத்தில் பாக்யாவின் கணவரான கோபி அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv