பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா எடுக்க போகும் முடிவுக்காக தான் மொத்த ரசிகர்களும் வெயிட்டிங். கோபி - ராதிகா விஷயம் முழுமையாக பாக்கியாவுக்கு தெரிந்து விட்டது. இப்போது பாக்கியா என்ன முடிவு எடுக்க போகிறார்? கோபியை பிரிந்து விடுவாரா? அல்லது ராதிகாவுக்கு விட்டு கொடுத்து விடுவாரா? இதுதான் ரசிகர்கள் மனதில் ஓடும் முக்கிய கேள்வி.
கோபியின் காதல் நாடகம் முடிவுக்கு வந்தது
. ராதிகா - கோபி உறவை நேருக்கு நேர் பார்த்து விட்டார் பாக்கியா. ராதிகாவின் கையை பிடித்து கொண்டு கோபி பேசியதை கேட்டு உடைந்து அழுகிறார். போதாத குறைக்கு ராதிகா சொன்ன எல்லாம் கதையும் அவருக்கு வந்து வந்து போக பாக்கியாவின் தலையில் இடி விழுந்தது போல் ஆகிறது. ஏமாற்றம்,நம்பிக்கை துரோகத்தை ஏற்றுக் கொள்ள மனம் வலிக்கிறது. அப்படியே மழையில் நனைந்தப்படி பித்து பிடித்தது போல் நடந்து வருகிறார். இந்த சீன்கள் இன்றைய எபிசோடில் டெலிகாஸ்ட் ஆகும்.
பேருக்கு தான் வில்லி.. பாரதி கண்ணம்மாவில் மீண்டும் ஏமாறும் வெண்பா!
வீட்டில் இருக்கும் கோபியின் குடும்பத்துக்கு கோபிக்கு விபத்து ஆன தகவல் குறித்து தெரிய வருகிறது இனியா, செழியன், ஈஸ்வரி அம்மா, ஜெனி எல்லோரும் அவரை பார்க்க ஓடி வருகின்றனர். ஏற்கெனவே புயல் அடித்து இருக்கும் வீட்டில் கோபியின் விபத்து இன்னும் இடி போல் இறங்குகிறது. கடைசியில் கோபியிடம் எதை பற்றியும் பேச வேண்டாம் என ஈஸ்வரி அம்மா முடிவு எடுக்கிறார்.
மழையில் நனைந்தப்படியே வீட்டுக்கு வந்து சேர்கிறார் பாக்கியா. வீட்டில் ராமமூர்த்தி தாத்தா மட்டுமே இருக்கிறார். அடுத்து பாக்கியாவின் முடிவு என்னவாக இருக்கும்? என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. எல்லா உண்மையும் இப்போது பாக்கியாவுக்கு தெரிந்து விட்டது. கோபியை பிரிந்து விடுவாரா? அல்லது ராதிகாவுக்கு விட்டு கொடுத்து விடுவாரா? குடும்பத்தினரிடம் இது பற்றி பேசுவாரா? என பரபரப்பான திருப்பங்களுங்காக ஒட்டுமொத்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களும் வெயிட்டிங்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.