Home /News /entertainment /

பாக்கியாவை போலீஸில் மாட்டிவிட்ட கோபி.. கதறி அழும் குடும்பத்தினர்!

பாக்கியாவை போலீஸில் மாட்டிவிட்ட கோபி.. கதறி அழும் குடும்பத்தினர்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தான் சமையல் செய்து கொடுத்தார் என கோபி போலீஸில் போட்டுக்கொடுக்கிறார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை காப்பாற்ற பாக்கியாவை போலீஸில் மாட்டிவிடுகிறார் கோபி. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    பாக்கியலட்சுமி புரமோவிலேயே ரசிகர்கள் கோபியை திட்டி தீர்க்கின்றனர். சீரியல் டெலிகாஸ்ட் ஆகுப்போது கேட்டகவே வேண்டாம். காரணம், எந்த கணவரும் செய்ய முடியாத, செய்ய கூடாத விஷயத்தை செய்கிறார் கோபி. காதலி ராதிகாவை காப்பாற்ற பாக்கியாவை போலீஸில் மாட்டிவிடுகிறார். வீட்டுக்கு வந்து பெண் போலீசார், பாக்கியாவை கைது செய்து அழைத்து செல்கின்றனர். பாக்கியாவின் இந்த நிலையை பார்த்து மொத்த குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழுது துடிக்கின்றனர். பாக்கியாவை காப்பாற்ற யார் வருவார்? என்பது தான் சஸ்பென்ஸாக உள்ளது.

    போஸ்ட் ஆபீஸில் வட்டி கிடைக்க வாடிக்கையாளர்கள் இதை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்!

    மயூவின் பிறந்த நாளை ராதிகா, ஆசிரமத்தில் கொண்டாட, அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்கிறார். அந்த சாப்பாடு ஆர்டர் எடுத்து செய்து கொடுத்தவர் பாக்கியா. இந்த சாப்பாட்டை பாக்கியா நேரில் கொண்டு வராதபடி ஏகப்பட்ட தகிடுதத்தங்களை செய்தார் கோபி. இப்படி இருக்கையில், கடைசியாக ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாறப்படுகிறது. ராதிகாவும் கோபியும் எல்லா கொண்டாட்டங்களையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில், ஒரு ஃபோன் வருகிரது.

    வெறித்தனமான விஜய் ஃபேன்ஸ் போல… பீஸ்ட் படத்திற்காக பிரபல சின்னத்திரை ஜோடி செய்த காரியம்!

    சாப்பாட்டை சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழுகின்றனர் என தகவல் கிடைக்க, இருவரும் பயத்தில் பதறி ஓடுகின்றனர். அதற்குள் சம்பவ இடத்திற்கு போலீஸ் வர, அவர்களிடம் பாக்கியா தான் சமையல் செய்து கொடுத்தார் என கோபி போட்டுக்கொடுக்கிறார். உடனே பாக்கியா வீட்டுக்கும் செல்லும் போலீஸ் அவரை கைது செய்கின்றனர். இந்த பரபரப்பான காட்சிகள் அடங்கிய புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தை அப்படியே பெருசாக்கி, ரதிகா - பாக்கியா ஃபிரண்ட்ஷிப்பை  கெடுத்துவிட வேண்டும் என கோபி நினைக்கிறார்.



    அடுத்து என்ன நடக்கும்? கோபி பாக்கியா கணவராக பாக்கியாவுக்கு பேசுவாரா? அல்லது ராதிகாவை மட்டும் காப்பாற்றி வீட்டுக்கு கிளம்பி விடுவாரா? சாப்பாடு விஷயம் என்ன ஆனது ? போன்ற கேள்விகளுக்கு வரும் வார எபிசோடில் பதில் கிடைக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி