ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பண்ண தப்புக்கு கிடைத்த தண்டனை.. பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!

பண்ண தப்புக்கு கிடைத்த தண்டனை.. பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!

பாக்கியலட்சுமி கோபி

பாக்கியலட்சுமி கோபி

காலை வணக்கம் கூறிவிட்டு பேச தொடங்கும் கோபி , தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாக்கியலட்சுமி சீரியல் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் குமார்,  கோபி ரோல் பற்றி பேசி இருக்கும் வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் கடந்த 2 வாரமாக சீரியலில் எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறி  வருகின்றன. கோபி பற்றிய உண்மை முதலில் ராதிகாவுக்கு தெரிந்தது. பின்பு கோபி - ராதிகாவுக்கு இடையே சண்டை. அடுத்த சில நாட்களில் ராஜேஷ் கோபி வீட்டுக்கு வந்து சண்டை போடுகிறார். இந்த குழப்பத்தில் வீட்டில் இருக்கும் எல்லோரும் கோபிக்கு ஃபோன் செய்தனர்.

கலர்ஸ் தமிழின் ’போட்டிக்கு போட்டி’ ... நடுவராக இணைந்த ஸ்ரீதர் மாஸ்டர்!

அதன் பின்பு கோபிக்கு கார் விபத்து நிகழ அவர் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனார். இந்த நேரத்தில் கோபியை பார்க்க ராதிகா ஆஸ்பிட்டல் வருகிறார். இருவரும் பேசியதை பாக்கியா பார்த்து விட்டார். இப்போது வீட்டில் புயல் அடிக்கிறது. கோபி பற்றிய உண்மையை மொத்த குடும்பத்திடமும் பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கிறார். இதன் பின்பு என்ன ஆகும். கோபி - பாக்கியா பிரிந்து விடுவார்களா? ராதிகா - கோபி திருமணம் நடக்குமா? என பல கேள்விகளுடன் ரசிகர்கள் ஆவலாக  வெயிட்டிங்.,

இந்த நேரத்தில் கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் குமார் ரசிகர்களிடம் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில்  காலை வணக்கம் கூறிவிட்டு பேச தொடங்கும் கோபி , தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறார்.

பின்பு, ”அடுத்த 1 வாரத்திற்கு செய்த தப்புக்கு குற்றவாளியாக தண்டனை அனுபவிக்க தயார் ஆகுகிறேன். பாவம் கோபி என்ன பண்ண முடியும். காதலுக்காக  நிறைய பொய் பித்தலாட்டங்களை சொல்லி இருக்கிறார். அதற்கு அனுபவிச்சு தான் ஆகணும். வயசானால் காதல் பண்ண கூடாது, அப்படியெல்லாம் சட்டம் இருக்கு,  என்ன பண்றது..ஓகே  நன்றி|” என கூறி வீடியோவை முடித்துள்ளார். இதை ஒருவகையான சீரியல் புரமோஷனாகவும் எடுத்துக் கொள்ளலாம். கோபிக்காக சதீஷ் பேசி இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Television, TV Serial, Vijay tv