Home /News /entertainment /

பெற்றோரை இழந்து 5 வயதில் சென்னைக்கு வந்த பாக்கியலட்சுமி கோபியின் சோக கதை!

பெற்றோரை இழந்து 5 வயதில் சென்னைக்கு வந்த பாக்கியலட்சுமி கோபியின் சோக கதை!

பாக்கியலட்சுமி கோபி

பாக்கியலட்சுமி கோபி

“ 5 வயதில் சொந்த தம்பியை இழந்தேன். அம்மா - அப்பாவை விபத்தில் பறிக்கொடுத்தேன்”

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ரோலில் நடிக்கும் நடிகர் சதீஷ் குமார் தனது குழந்தை பருவம் மற்றும் சென்னைக்கு வந்த கதை பற்றி பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பாக்கியலட்சுமி சீரியலை பார்ப்பவர்கள் அனைவரும் கோபியை திட்டாத நாளே இல்லை. தினமும் எபிசோடை பார்த்து விட்டு கோபி ரோலை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் கூட்டம் இங்கு ஏராளம். சின்னத்திரை சீரியல் வரலாற்றில் கதையின் வில்லனும் ஹீரோவும் ஒருவரே என்றால் அது கோபி கதாபாத்திரம் தான். மனைவியை ஏமாற்றி, காதலியுடன் ஊர் சுற்றுவது, அவரை 2 வது கல்யாணம் செய்ய துடிப்பது அதற்காக மொத்த குடும்பத்தையும் ஏமாற்றுவது என கோபியின் தகிடுத்தத்தம் இந்த சீரியலின்  வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்றே சொல்லலாம்.

    நடிகர் பிரதாப் போத்தன் மறைவு.. திரையுலகினர் அதிர்ச்சி!

    இந்நிலையில் சீரியலில் தற்போது கோபி மாட்டிக் கொண்டார். கோபி - ராதிகா உறவை பாக்கியா நேரில் பார்த்து விட்டார். கோபியிடம் சண்டை போட்டுவிட்டு இப்போது வீட்டை விட்டு வெளியேறி விட்டார் பாக்கியா. சீரியலில் அடுத்து என்ன நடக்கும்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சீரியல் ஹீரோ கோபியாக நடிக்கும் சதீஷ் குமார் , வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் ஆச்சரியப்பட வைத்த மந்திரக் கலைஞன் ‘சந்திரபாபு’

    கடந்த வாரம் இதே போல் கோபி பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில், சீரியல் குறித்து முக்கியமான அப்டேட்டை சதீஷ் வெளியிட்டு இருந்தார். அதே போல் ரசிகர்கள் கேட்ட சில  கேள்விக்கும் அந்த வீடியோவில் பதில் கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது கோபி பேசியிருக்கும் மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது.



    அதில் கோபியாக நடிக்கும் சதீஷ் பேசியிருப்பதாவது, “ 5 வயதில் சொந்த தம்பியை இழந்தேன். அம்மா - அப்பாவை விபத்தில் பறிக்கொடுத்தேன். அதன் பிறகு யார் ஆதரவும் இன்றி 2 சொக்கா, டவுசருடன் சென்னையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அவர் தான் என்னை வளர்த்தார். எனக்கு தமிழ் சொல்லி கொடுத்து, பேச சொல்லி கொடுத்து என்னை ஆளாக்கினார். அவர் மிகச் சிறந்த பெண்மணி. தமிழ் வெறும் மொழி மட்டுமில்லை அது ஒரு கலாச்சாரம், சக்தி எல்லாமே” என  தெரிவித்துள்ளார். இதுவரை கோபியை திட்டி தீர்த்த ரசிகர்கள் அவரின் சோகமான கதையை கேட்டதும் அவருக்கு ஆதரவாக சில உருக்கமான கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி