• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாக்கியலட்சுமி ட்விஸ்ட் : கையும் களவுமாக சிக்கிய கோபி  - அடுத்து என்ன?

பாக்கியலட்சுமி ட்விஸ்ட் : கையும் களவுமாக சிக்கிய கோபி  - அடுத்து என்ன?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

அப்பாவிடம் கோபி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இனி என்ன நடக்கும்?

  • Share this:
    பாக்கியலட்சுமி சீரியலில் கோவிலில் ராதிகாவுக்கு, கோபி பொட்டு வைப்பதை அவருடைய தந்தை நேரடியாக பார்த்துவிடுவதால் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    விஜய் டிவியில் ஒளிரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. மனைவி பாக்யாவுக்கு தெரியாமல், தன்னுடைய முன்னாள் காதலியான ராதிகாவுடன் இன்னும் ரொமானஸ் செய்து கொண்டிருக்கிறார் கோபி. இதில் வேடிக்கை என்னவென்றால் ராதிகாவும், பாக்யாவும் தோழிகள். ஆனால், கோபி தான் பாக்யாவின் கணவர் என்று ராதிகாவுக்கு தெரியாது. ராதிகாவின் காதலன் கோபி என்பது பாக்யாவுக்கு தெரியாது. இப்படியே, பல எபிசோடுகள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. கோபி எப்போது மாட்டுவார்? என்று பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். சீரியல் டைரக்டர் கோபி இப்போது மாட்டிவிடுவார், அப்போது மாட்டிவிடுவார் என்கிற ரீதியிலேயே எபிசோடுகளை நகர்த்திக் கொண்டிருக்கிறார். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் ரசிகர்களும் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணாம்மா நடப்பதையே பல நாட்களாக காட்டிக் கொண்டிருந்ததால், கண்ணம்மா மீம் கிரியேட்டர்களின் கன்டென்டாக மாறி, சமூகவலைதளங்களில் வைரலானார். அந்த இடத்தை நோக்கி இப்போது பாக்யலட்சுமி சீரியலின் கோபி கதாப்பாத்திரம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இப்போது வெளியாகிருக்கும் அடுத்த வார புரோமோவில் கோபி, ராதிகாவுடன் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனத்தை முடித்த பின்பு கோயில் குங்குமத்தை எடுத்து ராதிகாவின் நெற்றியில் வைத்துவிடுகிறார். இந்த நேரத்தில் தற்செயலாக கோவிலுக்கு வரும் கோபியின் அப்பா, இதனைப் பார்த்து விடுகிறார். தந்தை பார்த்து விட்டதை கோபியும், ராதிகாவும் கவனிக்கவில்லை.

    இந்தப் புரோமோவைப் பார்த்தால் அப்பாவிடம் கோபி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் என்பதுபோல் இருக்கிறது. ஆனால் எபிசோடு பார்த்தால் மட்டுமே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியும். தந்தை இதனை பார்த்துவிட்டு கண்டும் காணாமல் போகிறாரா? அல்லது கோபியை கண்டிக்கிறாரா? என்பது அடுத்த வார எபிசோடுகளில் நிச்சயம் தெரிந்துவிடும். அதேநேரத்தில் கோபி தில்லாலங்கடியின் உச்சமாக இருக்கிறார். அந்த கதாப்பாத்திரம் இல்லத்தரசிகளுக்கு பிடிக்காமல் இருந்தாலும், அவருடைய தகிடுதத்தங்களையும் ரசிக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் இந்தப் புரோமோவைப் பார்த்தால் கூட‘ இந்த டைம் கோபி சிக்கிட்டான்டா’ என்று தான் நினைப்பார்கள். இதில் இருந்து கோபி தப்பித்து விடுவாரா? அல்லது பாக்யாவையும், வீட்டையும் ஏமாற்றும் அவருடைய கில்லாடி வேஷம் கலைந்துவிடுமா? என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியும்.

    பிக் பாஸ் வீட்டில் இனி யாரும் பேசியே விபூதி அடிக்க முடியாது.. ரெய்டு விடும் கமல்ஹாசன்!

    இதனால், பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் ஆவலோடு அடுத்தடுத்த எபிசோடுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: