ராதிகாவுக்கு புடவை எடுக்க போய் வசமாய் சிக்கி கொண்ட கோபி... பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன?

பாக்கியலட்சுமி சீரியல்

ராதிகாவுக்கு புடவை எடுத்து தரும் போது சிக்கிய கோபி - பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பு!

 • Share this:
  ஸ்டார் விஜய் டிவி-யில் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் ஏராளமான சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.

  அந்த வகையில் பெண்கள், தாய்மார்கள் என அனைவரையும் கவர்ந்த ஒரு சீரியலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி. நன்கு படித்த கணவரை திருமணம் செய்து கொண்டு வசதியாக வாழ்ந்தாலும், பள்ளி படிப்பை தாண்டாத குடும்ப தலைவி, தனது குடும்பத்திற்காக எதிர் கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

  இதில் கதையின் நாயகியான பாக்கியலட்சுமி கேரக்டரில் நடிகை சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். அவரது கணவன் கேரக்டரில் சீரியல் நடிகர் சதீஷ் நடிக்கிறார். சொந்தமாக ஃபுட் டெலிவரி செய்யும் பிசினஸ் ஒன்றை துவங்கும் பாக்கியா, ஓரிரு நாளாலேயே டூ வீலரிலிருந்து விழுந்து காலில் பலமான அடியை பெற்று நடக்க முடியாமல் தவிக்கிறார். ஆனால் மகன் செழியனின் மனைவி ஜெனி மற்றும் மற்றொரு மகன் எழிலை தவிர வேறு யாரும் பாக்கியாவிற்காக கவலைப்படவில்லை. ஆனால் கோபிக்கு ஏற்படும் லேசான காயத்திற்கு வீடே பதறுகிறது. இப்படி இருக்கிறது பாக்கியாவின் நிலை.

  இதனிடையே கல்யாணமாகி கோபியின் அலுவலகத்திற்கு முதல் முறையாக தனது வீடு பணிப்பெண் செல்வியுடன் சென்றாள் பாக்கியா. அதுவும் கணவனின் அலுவலகத்திற்கு தான் ஃபுட் டெலிவரி செய்யப்போகிறோம் என்பது தெரியாமல். ஆனால் கோபி லன்ச் ஆர்டர் செய்ததோ தன்னை பார்க்க அலுவலகம் வந்த முன்னாள் காதலி மற்றும் இந்நாள் தோழி ராதிகாவிற்காக. வேறு ஒரு சந்தர்ப்பம் மூலம் ராதிகாவும் பாக்கியாவும் ஏற்கனவே தோழிகள் தான். அது கோபிக்கும் தெரியும். தான் ராதிகாவுடன் பழகி வருவதை மனைவி பாக்கியா உட்பட தனது வீட்டினர் யாருக்கும் தெரியாமல் ரசிகசியம் காத்து வரும் கோபிக்கு பாக்கியாவின் திடீர் ஆபிஸ் விசிட் கடும் அதிர்ச்சியை தந்தது. ஒருவழியாக பாக்கியாவையும் ராதிகாவையும் நேருக்குநேர் சந்திக்க விடாமல் எப்படியோ பேசி சமாளித்து வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்.

  இது நேற்றைய எபிசோட் ஆகும். இந்நிலையில் இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள எபிசோடில் கோபியும், ராதிகாவும் வெளியே துணி எடுக்க கடைக்கு செல்கின்றனர். இதனிடையே கோபியின் வீட்டில் வேலை பார்க்கும் செல்வி அவரது மகளின் பிறந்த நாளுக்காக டிரெஸ் எடுக்க அதே துணிக்கடைக்கு வந்துள்ளார். அங்கே வைத்து செல்வி இருவரையும் ஒன்றாக பார்த்து விடுகிறார். ஆனால் ராதிகாவின் முகத்தை செல்வியால் சரியாக பார்க்க முடியவில்லை. வேறு ஏதோ ஒரு பெண்ணுக்கு கோபி துணி எடுத்து கொடுத்து மட்டும் செல்விக்கு நன்றாக புரிந்து விடுகிறது. எவ்வளவோ முயன்றும் கோபியுடன் இருப்பது ராதிகா என்பதை செல்வியால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏனென்றால் ராதிகா முகத்தை வேறு திசையில் திருப்பி வைத்துள்ளதால் என்பது போல கதை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் கோபியின் வீட்டில் பெரிய பிரச்சனை வெடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஹாட்ஸ்டார் விஐபி யூசர்களுக்காக காலை 6 மணிக்கே இரவு சீரியல்கள் அப்லோட் செய்யப்பட்டு விடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: