ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோபிக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது.. உண்மையை போட்டுடைத்த செல்வி அக்கா!

கோபிக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது.. உண்மையை போட்டுடைத்த செல்வி அக்கா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடின் இறுதியில் கோபியை சந்தித்து பேச ராதிகா உடனே அவரை வீட்டுக்கு வர சொல்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ரசிகர்களுக்கு பல ட்விஸ்டுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக கோபியின் தகிடுதத்தம் மொத்த குடும்பத்திற்கு தெரியும் நேரம் வந்து விட்டது.

பாக்கியலட்சுமி சீரியலில் அண்மையில் நடந்து முடிந்த மகா சங்கமத்தில் கோபியின் மொத்த ஆட்டமும் முடிவுக்கு வந்து விட்டது. அதாவது, கோபி - ராதிகாவின் உறவை பற்றி மூர்த்தி தனத்துக்கு தெரிந்து விட்டது. இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த மூர்த்தி, ராதிகாவிடம் போய், கோபியை நம்ப வேண்டாம் என்றும் அவர் நல்லவர் இல்லை என்றும் அதிர்ச்சியை தூக்கி போடுகிறார். இதனால் ராதிகாவுக்கு பயங்கர ஷாக், இதுப்பற்றி கோபியிடம் பேச துடித்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு இதே வேலை தான்.. பிரபல சீரியல் நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! ஏன்?

அதே போல், பாக்கியாவிடம் தனம் சுற்றி வளைத்து கோபி விஷயத்தில் கவனமாய் இருங்கள் என்று சொல்கிறார். இதன் அர்த்தம் புரியாமல் பாக்கியா தவிக்கிறார். அதே போல், கடைசி நேரத்தில் கோபிக்கும் மூர்த்திக்கும் சண்டை வெடிக்க மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் கோபியிடம் ஈஸ்வரி அம்மா என்ன பிரச்சனை? என்று விசாரிக்கிறார். கோபி பொய் பேசுவது அவருக்கு தெரிகிறது.

இது ஒருபுறம் இருக்க, செல்வி அக்கா மீது பாக்கியா கோபப்படுகிறார். காரணம், கோபிக்கு வேற ஒரு குடும்பம் இருக்கிறது என எனக்கு சந்தேகமாக இருக்கிறது என செல்வி அக்கா கூறியதை பாக்கியாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஆனால் அவர் உண்மையை தான் சொல்கிறார் என்பது உண்மை தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஆனால் பாக்கியா, கோபி பெண்கள் விஷயத்தில் ராமர் என்கிறார். ஆனால் இதை அவரின் செல்ல மகனும் எழிலும் மறுக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட கோபி பற்றிய உண்மை தெரியும். இதனால் அவரும் கோபியை நம்ப வேண்டாம் என்று  பாக்கியாவுக்கு அட்வைஸ் செய்கிறார்.

துரோகம் செய்த கணவனை கையும் களவுமாக பிடித்த செல்லம்மா – டாப் கியரில் செல்லும் விஜய் டிவி-யின் புது சீரியல்!

மொத்த குடும்பமும் இப்படி கோபிக்கு எதிராக பேச பாக்கியா உடைந்து போகிறார். என்ன நடக்குமோ? என பதறுகிறார். அதுமட்டுமில்லை இன்றைய எபிசோடின் இறுதியில் கோபியை சந்தித்து பேச ராதிகா உடனே அவரை வீட்டுக்கு வர சொல்கிறார். அடுத்து என்ன நடக்கும்? என்பது நாளை தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv