Home /News /entertainment /

ராதிகா - கோபியின் உறவுக்கு முற்றுப்புள்ளி.. பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் ட்விஸ்ட்!

ராதிகா - கோபியின் உறவுக்கு முற்றுப்புள்ளி.. பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீர்யல்

பாக்கியலட்சுமி சீர்யல்

கோபி, ராதிகாவுக்காக கடையில் பூ வாங்குகிறார். இதை அந்த பக்கம் வரும், கோபியின் அப்பா சத்திய மூர்த்தி பார்த்து விடுகிறார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா உறவுக்கு கோபியின் அப்பா முற்றுப்புள்ளி வைக்கிறார். இது குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் திரைக்கதையில் பயங்கரமான ட்விஸ்ட். மனைவி பாக்கியா மற்றும் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் ராதிகா உடன் தொடர்பில் இருக்கிறார் கோபி. அதை மறைப்பதற்காக கோபி பல வேலைகளையும் செய்து வருகிறார். தனது குடும்பத்துக்கு ராதிகா பற்றிய விஷயம் தெரிந்து விடுமோ என பயத்தில் தான் ஒவ்வொரு நாளும் கோபி லைஃப் நகர்கிறது. இன்னும் எத்தனை நாள் தான் கோபி இப்படியே பயந்து பயந்து ராதிகாவை சந்தித்து பேச போகிறார் என்று தெரியவில்லை.

    ராதிகாவும், பாக்யாவும்  நல்ல தோழிகள். ஆனால், கோபி தான் பாக்யாவின் கணவர் என்று ராதிகாவுக்கு தெரியாது. ராதிகாவின் காதலன் கோபி என்பது பாக்யாவுக்கு தெரியாது. இப்படியே, பல எபிசோடுகள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. கோபி எப்போது மாட்டுவார்? என்று பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். அதில் முதல் படியாக தனது அப்பாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் கோபி. கோயிலில் வைத்து கோபி, ராதிகாவுக்கு பொட்டு வைப்பதை தனது இரண்டு கண்களால் சத்திய மூர்த்தி பார்த்துவிட அதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

    கோபியை அவரின் அப்பா வார்னிங் கொடுத்தும் கோபி திருந்துவதாக தெரியவில்லை. பலமுறை சத்தியமூர்த்தி, கோபிக்கு அட்வைஸூம் செய்து விட்டார். இந்நிலையில் சீரியலில் அடுத்த ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.



    கோபி, ராதிகாவுக்காக கடையில் பூ வாங்குகிறார். இதை அந்த பக்கம் வரும், கோபியின் அப்பா சத்திய மூர்த்தி பார்த்து விடுகிறார். இந்த முறை அவரின் கோபத்தை அவரால் அடக்க முடியவில்லை. நேராக ராதிகா வீட்டுக்கு போய் சண்டை போடுகிறார். அந்த நேரம், வீட்டில் ராதிகா அம்மா மட்டும் இருக்க, அவரிடம் கோபி - ராதிகா உறவை இதோடு முடித்து கொள்ளும்படி வார்னிங் கொடுக்கிறார். பின்பு வீட்டுக்கு வரும் கோபியிடம் ராதிகாவின் அம்மா சத்தம் போடுகிறார். இனி இந்த வீட்டு பக்கம் வர வேண்டாம் என்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் இந்த திருப்பத்தால் பல் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கவுள்ளன. கண்டிப்பாக டி.ஆர்.பியில் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்  டாப்பில் வந்துவிடும் போல.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி