ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய கோபி? வைரலாகும் படம்

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய கோபி? வைரலாகும் படம்

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்

தற்போது ராதிகாவுடன் நடிகர் சஞ்சீவ் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வரும் சதீஷுக்கு பதில் நடிகர் சஞ்சீவ் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

  விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

  பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

  பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு தனது காதலி ராதிகாவை திருமணம் செய்துக் கொண்ட கோபி தற்போது குடும்பத்திலிருந்து பிரிந்துவிட்டார். வீட்டில் அனைவருமே அவரை வெறுத்து ஒதுக்கிய நிலையில், குடும்பத்தினரை வெறுப்பேற்றும் வகையில் ராதிகாவுடன் அருகிலேயே புது வீட்டுக்கு குடி வந்துவிட்டார். இந்நிலையில் தற்போது ராதிகாவுடன் நடிகர் சஞ்சீவ் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

  நான் ஒன்றும் சீக்கிரமே இறந்துவிட போவதில்லை...நேர்க்காணலில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா
   
  View this post on Instagram

   

  A post shared by @rajkamalshootinghouse  இதைப்பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் இனி சஞ்சீவ் தான் நடிக்கிறாரோ என குழப்பமடைந்தனர். பின்னர் அது ஒரு விளம்பர படத்திற்கான படப்பிடிப்பு என்றும், அதில் ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிக்க, அவருடன் சஞ்சீவ் இணைந்து நடிப்பதாக தெரிய வந்திருக்கிறது.

  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial, Vijay tv