ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோபி மீது ராதிகாவுக்கு வந்த சந்தேகம்.. பாக்கியலட்சுமி சீரியலில் செம்ம ட்விஸ்ட்!

கோபி மீது ராதிகாவுக்கு வந்த சந்தேகம்.. பாக்கியலட்சுமி சீரியலில் செம்ம ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி கோபி - ராதிகா

பாக்கியலட்சுமி கோபி - ராதிகா

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா, கோபியை பாக்கியா வீட்டுக்கு சர்ப்பிரைஸாக அழைத்து செல்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. ராதிகாவுக்கு முதன்முறையாக கோபி மீது சந்தேகமும் வந்து விட்டது.

  பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற கதை போல், 2 பெண்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் கோபி மொத்த குடும்பத்திடமும் மாட்ட போகும் நேரம் வந்து விட்டது. அதிலும் குறிப்பாக ராதிகாவுக்கு கோபி மீது சந்தேகமும் வர தொடங்கி விட்டது. இதுநாள் வரை கோபி பற்றிய உண்மை தெரிந்தவர்கள் 2 பேர் தான். எழில் மற்றும் ராமமூர்த்தி தாத்தா. இருவருமே வீட்டின் அமைதிக்காக இந்த உண்மையை சொல்லாமல் மறைக்கின்றனர். இவர்கள் சொல்வதற்குள்ளே கோபியே கையும் களவுமாக மாட்டிக் கொள்வார் போல. அந்த நிலையில் தான் இப்போது சீரியலின் கதைக்களம் உள்ளது.

  பிரபல சீரியலில் இருந்து விலகிய பாரதி கண்ணம்மா வெண்பா?

  மயூவின் பிறந்த நாளுக்கு ராதிகா, டீச்சர் என்று அழைக்கும் பாக்கியாவிடம் தான் சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்து இருந்தார். அதே போல் அன்றைய தினம் பாக்கியா - கோபியை சந்திக்க வைக்க வேண்டும் என்றும் திட்டம் போட்டார். ஆனால் கோபி வழக்கம் போல் தில்லாங்கடி வேலை செய்து பாக்கியாவை வரவிடாமல் செய்தார். அப்படி இருந்தும் செகல்வி அக்கா அந்த இடத்திற்கு வந்தார், அவரிடமும் மாட்டிக் கொள்ளாமல் கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார்.

  ' isDesktop="true" id="730733" youtubeid="UvWPa18x5zQ" category="television">

  இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ராதிகா, கோபியை பாக்கியா வீட்டுக்கு சர்ப்பிரைஸாக அழைத்து செல்கிறார். பாக்கியா வீட்டுக்கு போகலாம் என்று சொன்னதும் கோபியின் முகம் மாறுவதை ராதிகா நோட் செய்கிறார். எந்த காரணம் சொல்லியும் தப்பிக்க முடியாது, இன்று பாக்கியா டீச்சரை சந்தித்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கிறார்.

  வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளிலேயே ஹோம் லோன் வாங்கலாமா?

  இருவரும் காரில் பாக்கியா வீட்டுக்கு கிளம்புகின்றனர். அடுத்து என்ன நடக்கும்? கோபி எப்படி இந்த விஷயத்தில் இருந்து தப்பிப்பார் என்பதை இன்றைய எபிசோடில் தெரிந்து கொள்ளலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, TV Serial Promos, Vijay tv