Home /News /entertainment /

என்ன கோபி இதெல்லாம்? காதலி ராதிகாவுக்காக இப்படியா!

என்ன கோபி இதெல்லாம்? காதலி ராதிகாவுக்காக இப்படியா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

ராதிகாவை பார்த்ததும் கோபி வழக்கம் போல் நடிக்க தொடங்குகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவின் கையைப் பிடித்து கல்யாணத்திற்காக கெஞ்சுகி்றார் கோபி.

    இவ்வளவு நாளாக பயந்து பயந்து, மற்றவர்களுக்கு தெரியாமல் குடும்பத்திற்கு பயந்து ராதிகாவை ரகசியமாக சந்தித்து வந்த கோபி டைவர்ஸ் வாங்கி விட்டதால் ஃபீரி பேட் ஆகிவிட்டார். இதனால் தைரியமாக பொது இடங்களில் ராதிகாவை பார்த்து பேசுகிறார். பொது இடம் ஓகே, ஆனால் இனியா படிக்கும் ஸ்கூலில்  கூட கோபி , ராதிகாவை  கூலாக சந்தித்து பேசுகிறார். இதில் கொடுமை என்னவென்றால் ஸ்கூலுக்கு பாக்கியாவும் வந்துள்ளார். ராதிகாவை பார்த்ததும் கோபி வழக்கம் போல் நடிக்க தொடங்குகிறார். கோபி மீது ராதிகாவுக்கு இப்போது சென்டிமெண்ட்.

    விஜய் டிவி சீரியல் பிரபலத்தின் அக்கா அந்த நடிகையா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

    கோபி ரூமில் தங்கி கஷ்டப்பட நான் தான் காரணம் என நினைக்கிறார். அதை நினைத்து வருத்தப்படுகிறார். இந்த நேரத்தில் தான் ராதிகா, கோபியை ஹோட்டல் ரூமில் பார்க்கிறார். கோபி கஷ்டப்படுவதாக நினைக்கிறார். ராதிகாவிடம் கோபி அமைதியாக பேச்சுக் கொடுக்கிறார்., மீண்டும் கல்யாணம் பற்றி பேசுகிறார். ஒரு கட்டத்தில் ராதிகாவின் கையை பிடித்து கொண்டு கெஞ்சுகிறார். வயசுக்கு ஏற்ற வேலையா கோபி இது? ராதிகாவும் கோபியின் பேச்சை கவனிக்க தொடங்குகிறார்.

    இன்னும் 2 மாதத்தில் சீரியலில் நடிக்க வரும் ஆல்யா.. எந்த சேனலில் தெரியுமா?

    ஸ்கூலில் இனியாவை பார்த்து விட்டு பாக்கியா உடனே கிளம்புகிறார். அவர் வரும் வழியில் தான் கோபியும் ராதிகாவும் கையை பிடித்து பேசுகிறார்கள். இதை பாக்கியா பார்ப்பதை விட இனியா பார்த்து இருந்தால் அம்மாவின்  அருமை தெரிந்து இருக்கும். ஆனால் அதை பாக்கியா தான் பார்க்கிறார். அடுத்து என்ன என்பது நாளைக்கு தான் தெரியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி