Home /News /entertainment /

ராதிகாவுக்காக செல்ல மகள் இனியாவை அடிக்க போன கோபி! மொத்த குடும்பமும் ஷாக்

ராதிகாவுக்காக செல்ல மகள் இனியாவை அடிக்க போன கோபி! மொத்த குடும்பமும் ஷாக்

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மீது கோபிக்கு இருக்கும் காதல் அவரை குடும்பத்தில் வில்லன் ஆக்குகிறது.

    பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. கோபியின் செயலால் மொத்த குடும்பமும் ஷாக்கில் உறைந்து போகிறார்கள்.

    சின்னத்திரை டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்புக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொணிருக்கிறது. போன வாரம் முழுவதும் ஜாலியாக மொத்த குடும்பத்தையும் ஏமாற்றிக் கொண்டிருந்த கோபி இப்போது மிகப் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். அதில் இருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் குழம்பி போயுள்ளார். மகா சங்கமம் எபிசோடில் பாக்கியா வீட்டுக்கு வந்த மூர்த்தியும் தனமும் ராதிகாவிடம் மிகப் பெரிய உண்மையை சொல்கின்றனர். இதை கேட்டு அதிர்ச்சி ஆன ராதிகா உடனே கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்கிறார்.

    இதையும் படிங்க.. எனக்கு அமீரை பிடிக்கும்.. மேடையில் போட்டுடைத்த பிக் பாஸ் பாவ்னி!

    அதே போல் கோபியின் வீட்டிலும் கோபி நடவடிக்கை மீது சந்தேகம் வர தொடங்கி விட்டது. கோபியின் அம்மா ஈஸ்வரி, பாக்கியாவிடம் கோபியை நம்ப வேண்டாம் ஜாக்கிரதையா இரு என்கிறார். இதனால் கோபி மீது பாக்கியாவுக்கு  ஏகப்பட்ட சந்தேகங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரம் பார்த்து கோபியை ராதிகா டார்ச்சர் செய்வதால், கோபி என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை மாட்டிக் கொண்டால் இத்தனை மாதமாக போட்ட பிளான் எல்லாம் வீணாகிவிடும் என நினைக்கிறார்.

    இந்நிலையில் தான் இன்றைய எபிசோடில் ராதிகா பற்றிய குழப்பத்தில் இருக்கும் கோபி இனியாவை அடிக்க கை ஓங்கி விடுகிறார். கோபியின் அப்பா ராமமூர்த்தி பேசியதை இனியா வீடியோவாக எடுத்து வைத்து இருந்தார். பக்க வாதத்தால் பேச முடியாமல் இருக்கும் ராமமூர்த்தி, ஒரு ஒரு வார்த்தையாக பேச தொடங்கிறார். அதை சந்தோஷத்துடன் இனியா வீடியோ எடுக்க அதை கோபியிடம் காட்டுகிறார். டென்ஷனில் இருக்கும் கோபி அப்புறம் பார்க்கிறேன் என்கிறார்.

    இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?

    ஆனால் இனியா விடாமல் அடம் பிடிக்க, கோபத்தில்,கோபி அடிக்க செல்கிறார். இதைப்பார்த்து மொத்த குடும்பமும் ஷாக்கில் நிற்கின்றனர். ஈஸ்வரி அம்மாவுக்கு கோபம் வந்து கோபியை திட்டுகிறார். பாக்கியா, இனியாவை திட்டினால் கூட தனது செல்ல மகளை , கோபி விட்டு கொடுக்க மாட்டார் . இப்படி இருக்கையில் ராதிகா மீது கோபிக்கு இருக்கும் காதல் அவரை குடும்பத்தில் வில்லன் ஆக்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி