ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Baakiyalakshmi: ராதிகா வீட்டில் பாக்யாவிடம் வசமாக மாட்டிக் கொள்ளும் கோபி

Baakiyalakshmi: ராதிகா வீட்டில் பாக்யாவிடம் வசமாக மாட்டிக் கொள்ளும் கோபி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்த ராதிகாவுடன் நெருக்கம் காட்ட, ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ராதிகா வீட்டில் மனைவி பாக்யாவிடம் கோபி மாட்டிக் கொண்டது போல் பாக்கிய லட்சுமி சீரியலில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

  விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

  பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் விகாஸ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

  பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்த ராதிகாவுடன் நெருக்கம் காட்ட, ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. இதற்காக பாக்யாவை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பாக்யா எப்படி தாங்கிக் கொள்வாள், ராதிகாவை கோபி திருமணம் செய்துக் கொள்வானா? என்ற ரீதியில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியலின் கதை சென்றுக் கொண்டிருக்கிறது.

  மனைவி திருமணத்திற்கு வந்த கணவன் முத்துராசு... விறுவிறுப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் 2!

  இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பாக்யாவும் செல்வியும், ராதிகா வீட்டிற்கு செல்கின்றனர். அப்போது கோபியும் அங்கிருக்கிறார். அவர்கள் வந்ததைப் பார்த்து வீட்டிற்குள் ஒளிந்துக் கொள்கிறார் கோபி. நான் ஒருத்தர் கூட ரிலேஷன்ஷிப்பில் இருக்கேன்னு சொன்னேன்ல டீச்சர், அவர் இப்போ இங்க தான் இருக்காரு. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம் என்கிறார் ராதிகா.

  ' isDesktop="true" id="715844" youtubeid="Pz94nr_ji54" category="television">

  வலிமை வசூல் - விமர்சகர்களை நாய் என சாடிய தயாரிப்பாளர்

  பின்னர் ராதிகா வீட்டிலிருந்து வெளியில் வரும் போது, வாசலில் கோபியின் கார் இருப்பதை பார்த்த செல்வி, சார் கார் ஏன்கா இங்க நிக்குது, ஒருவேளை ராதிகா சொல்ற ஆள் நம்ம சாரா இருக்குமோ, எதுக்கும் வீட்டுக்குள்ள போய் பாத்துட்டு வரலாம் என்கிறார்.

  பாக்யாவிடம் வசமாக மாட்டிக் கொள்வாரா கோபி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial, Vijay tv