Home /News /entertainment /

பாக்கியாவை பிரிவது குறித்து மனம் திறந்த கோபி... இனியாவின் வேற லெவல் ரியாக்‌ஷன்!

பாக்கியாவை பிரிவது குறித்து மனம் திறந்த கோபி... இனியாவின் வேற லெவல் ரியாக்‌ஷன்!

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்

நானும் அம்மாவும் பிரிஞ்சிட்டா யார் பக்கம் இருப்ப என்று கோபி கேட்க, ஷாக் ஆகிறாள் இனியா.

    தமிழ் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள சீரியல்களில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி.

    திங்கள் முதல் சனி வரை விஜய் டிவி-யில் இரவு 8.30 - 9 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். எனினும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரைபர்கள் காலை 6 மணிக்கே அன்றைய நாளின் சீரியல்களை பார்க்கலாம். அந்த வகையில் இன்றைய எபிசோடின் கதை தற்போது வெளிவந்துள்ளது.

    அமிர்தா மற்றும் அவரது மாமனார் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு திரும்பி செல்லும் போது சில ரவுடிகள் அமிர்தாவை கிண்டல் செய்து வம்பிழுக்கிறார்கள். இதனால் கோபமடையும் அமிர்தாவின் மாமனார் பொம்பள பிள்ளையை கிண்டல் செய்வதோடு திமிராக பேசுகிறாயே என்று அடிக்க போக, பதிலுக்கு ரவுடி அவரது கையை பிடித்து முறுக்கி கீழே தள்ளி விட்டு விடுகிறான்.

    பின்னர் இனியாவை பதினோராம் வகுப்பு சேர்ப்பதற்காக பாக்கியா, கோபி மற்றும் இனியா மூவரும் பள்ளிக்கு செல்கிறார்கள். அங்கு பாக்கியா இனியாவின் தோழிகளிடம் என்ன குரூப் எடுக்க பேசுகிறார்கள் என்பது பற்றி கேட்கிறார். அதற்கு சயின்ஸ் குரூப் எடுத்து மெடிசின் படிப்பேன் என்று கூற அப்படின்னா என்ன என்று கேட்டிறார் பாக்கியா. இதனால் கடுப்பாகும் இனியா டாக்டருக்கு படிக்க போறா மா அவ என்று அலுத்து கொண்டு கூறுகிறார். எதுவும் தெரியாம எதுக்கு மத்தவங்ககிட்ட பேசுற என்று அம்மாவை கடிந்து கொண்டு, அம்மா சரியான போர் பா என்று கோபியிடம் சொல்கிறாள்.

    ஃபீஸ் கட்டி முடித்த பின் இனியா ட்ரீட் வைக்க சொல்லி கோபியிடம் கேட்க, ஓகே என்று சொல்கிறான் கோபி. சரி வாங்க போலாம் என இருவரையும் கோபி கூப்பிட, அம்மா வேணாம் பா போர், அம்மா வந்தா சாப்பாட்டு விஷயத்தில் என்னை ரொம்ப கன்ட்ரோல் பண்ணுவாங்க. நாம 2 பேர் மட்டும் போலாம் என்று கூறுகிறாள் இனியா. இதனை தொடர்ந்து பாக்கியா வீட்டிற்கு கிளம்பி செல்ல கோபியும், இணையவும் மட்டும் ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு சென்ற பின் அம்மா பாக்கியாவை பற்றி குறை கூறுகிறாள் இனியா.

    வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்ன யாஷிகா ஆனந்த்!



    அதற்கு கோபி பாக்கியா பாவம் இனியா, அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுகிறான். உங்களுக்கு அம்மாவை பிடிக்காது தானே என இனியா கேட்க அதற்கு மழுப்பலாக பதில் சொல்லி விடுகிறான் கோபி. பின் நானும் அம்மாவும் பிரிஞ்சிட்டா யார் பக்கம் இருப்ப என்று கோபி கேட்க, ஷாக் ஆகிறாள் இனியா. பின்னர் சும்மா ஜோக்குகாக தான் கேட்கிறேன் என்று சொல்கிறான். இதனை தொடர்ந்து கண்டிப்பா உங்க கூட தான் இருப்பேன் என்று சொல்லும் இனியா, எப்போ பிரிய போறீங்க என்று வேடிக்கையாக கேட்கிறாள். அதற்கும் கோபி ஜஸ்ட் ஜோக்கிங் என்று கூறுகிறான்.

    சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்... தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

    மறுபக்கம் அமிர்தா வீட்டிற்கு வந்து மாமியாரிடம் நடந்த விஷயத்தை சொல்லி கொண்டிருக்கும் போது எழில் கால் செய்ய, சம்பவத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறாள் அமிர்தா. ஆனால் எதோ தப்பாக இருப்பதை உணரும் எழில் உடனடியாக அமிர்த வீட்டிற்கு வந்து நடந்த விஷயத்தை தெரிந்து கொள்கிறான். பின்னர் ரவுடிகளிடம் சென்று தட்டி கேட்க அமிர்தாவை அழைத்து கொண்டு எழில் புறப்படுவதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி