முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரியும் பாக்கியா - கோபி? பாக்கியலட்சுமி எபிசோடில் உச்சக்கட்ட பரபரப்பு!

பிரியும் பாக்கியா - கோபி? பாக்கியலட்சுமி எபிசோடில் உச்சக்கட்ட பரபரப்பு!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ,கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவாரா?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா உறவை பற்றி மொத்த குடும்பத்தார் முன்பு  போட்டு உடைக்கிறார் பாக்கியா. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

புரமோவில் கூறுவது போல் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் இந்த தருணத்திற்காக தான் வெயிட்டிங். ராதிகா - கோபி உறவு பாக்கியாவுக்கு தெரிந்து விட்டது. கோபி - ராதிகா பேசி கொண்டிருப்பதை கண் எதிரே பார்த்து விட்டார் பாக்கியா. இந்த துரோகம் தாங்க முடியாமல் அழுதப்படியே கொட்டும் மழையில் வீட்டுக்கு கிளம்பி சென்றார். பாக்கியாவின் பேச்சில், நடத்தையில் மாற்றம் இருப்பதை பார்த்த கோபியின் அப்பா, பாக்கியாவுக்கு உண்மை தெரிந்து  இருக்குமோ? என பயப்படுகிறார். தனது மருமகளுக்காக மகனுடன் சண்டை போட்ட அவருக்கு பயமும் கவலையும் அதிகம் ஆகிறது.

6 வருடமாக அந்த நடிகையின் மகனுக்கு விஷால் செய்து வரும் மிகப் பெரிய உதவி!

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஆஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வரும் கோபியிடம் சண்டை போடுகிறார் பாக்கியா. இதுவரை கோபியை எதிர்த்து கூட பேசாத பாக்கியா ஒருகாமையில் பேசி கத்தி, சண்டை போடுவது அனைவருக்கும்  அதிர்ச்சியாக இருக்கிறது. ஆஸ்பிட்டலில் வந்து உங்களை பார்த்தது, பில் கட்டியது, கையை பிடித்து கொண்டு நீங்கள் கொஞ்சியது யார்? என பாக்கியா கேள்விகளை அடுக்க, கோபிக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. பாக்கியாவின் கேள்வியால் குழம்பி போகும் ஈஸ்வரி அம்மா என்ன விஷயம்?  என விசாரிக்கிறார்.

அந்த விஷயம் தான் காரணமா? ‘அபி டெய்லர்’ சீரியலில் முக்கிய மாற்றம்!

அப்போது தான் பாக்கியா மொத்த உண்மையையும் போட்டு உடைக்கிறார். ராதிகாவுடன் கோபிக்கு இருக்கும் உறவை பற்றி சொல்லி மொத்த குடும்பத்திற்கும் ஷாக்  கொடுக்கிறார். பாக்கியாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்பது ராமமூர்த்தி, எழிலுக்கும் தெரிகிறது. பின்பு இருவரும் பேச ஆரம்பிக்கிறர்கள். இதனால் இனியா, செழியன், ஜெனி எல்லோருக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. பாக்கியாவின் அனைத்து வார்த்தைகளும் ஊசி போல் இறங்க கோபியிடம் பதில் இல்லை. திகைத்து நிற்கிறார்.

' isDesktop="true" id="768804" youtubeid="Xjc6k-eEmMk" category="television">

அடுத்து என்ன நடக்கும்?  கோபி - பாக்கியா பிரிந்து விடுவார்களா? பாக்கியா ,கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அதே போல் ராதிகா கோபியை ஏற்றுக் கொள்வாரா? அல்லது அவரும் கோபியை விட்டு மும்பைக்கு சென்று விடுவார? என்பது வரும் வாரத்தில் தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Television, TV Serial, Vijay tv