Home /News /entertainment /

பாக்கியா வீட்டில் நடக்க போகும் விசேஷம்.. ஷாக் கொடுக்க போகும் ராதிகா!

பாக்கியா வீட்டில் நடக்க போகும் விசேஷம்.. ஷாக் கொடுக்க போகும் ராதிகா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்டுமி சீரியலில் ராதிகாவும் மயூவுடன் வரபோவதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன

    விஜய் டிவியின் பிரபலமான தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு அடுத்தபடியாக யாரை உங்களுக்கு பிடிக்காது என்று ரசிகர்களிடம் கேட்டால், சற்றும் தயங்காமல் செழியன் கதாபாத்திரத்தின் பெயரை சொல்லுவார்கள். குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் நடிகரை மாற்றினாலும் கூட, சீரியலின் இயக்குனர் 'செழியன்' கதாபாத்திரத்தின் கஞ்சத்தனத்தை கொஞ்சம் கூட மாற்றுவதாய் இல்லை. அதற்கு பாக்கியலட்சுமி சீரியலின் சமீபத்திய ப்ரோமோ வீடியோவே சாட்சி!

    பாக்கியலட்சுமியை தன் மகன் கோபிக்கு திருமணம் செய்து வைத்த முதல் நாள் தொட்டு, பாக்யலட்சுமிக்கு ஒரு நல்ல  மாமனாராய் திகழும் ராமமூர்த்தி "தாத்தாவிற்கு" பிறந்தநாள் வரவுள்ளது. அதற்கு என்ன செய்யலாம்? தாத்தாவிற்கு என்ன வாங்கி கொடுக்காலம் என்று செழியனும், ஜெனிஃபரும் கலந்துரையாடுகின்றனர்.

    ராதிகாவுக்கு விருது வாங்கி தந்த காமெடி நடிகர் இயக்கிய படம்!

    லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் கூட தன் வீட்டிற்காக, தன் சொந்த அம்மாவிற்காக, தம்பிக்காக, அவ்வளவு ஏன்? தன்னை எப்போதும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடும் தன் அப்பாவிற்கு கூட, 10 ரூபாய் கூட செலவு செய்ய விரும்பாத செழியன், ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்கென்று பெரிதாக என்ன செய்து விடப்போகிறான் என்பது பலரும் அறிந்ததே. இருந்தாலும் கூட நம் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜெனிஃபர் கேட்பதால், மனம் இறங்கி வந்து செழியன் ஏதாவது செலவு செய்வாரா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு - ஏமாற்றம் தான் மிச்சம்!

    "பிறந்தநாள் கொண்டாட்டம் வீட்டில் தான் நடக்கவுள்ளது. அதற்காக அப்பா நிறைய பணம் கொடுத்து இருக்கிறார். அம்மாவும் பணம் வைத்து இருக்கிறார்கள். போதாக்குறைக்கு பாட்டியும் பணம் கொடுப்பார். இதற்கிடையில் நான் வேறு பணம் கொடுக்க வேண்டுமா? அப்படி என்ன பெரிதாக செலவாகி விடப்போகிறது? ஒரு கேக் வெட்டுவார்கள்; அவ்வளவு தானே?" என்று எப்போவும் போல அக்கறை இல்லாமல் செழியன் கேட்க, ஜெனிஃபரின் முகமே மாறி போகிறது.

    அஜித்தின் வான்மதி உருவாக காரணமாக இருந்த மதுமதி!

    "வேண்டுமென்றால் நாம் ஒரு கிஃப்ட் வாங்கி கொடுக்கலாம்" என்று செழியன் சொல்ல, அதைக்கேட்டு ஆர்வமடையும் ஜெனிஃபர் "என்ன வாங்கி கொடுக்கலாம்?" என்று கேட்க, "ஒரு வேஷ்டி சட்டை எடுத்து கொடுக்கலாம்!" என்று கூற "ரொம்ப அல்பத்தனமா இருக்கு! நீ கஞ்சம் என்று இந்த வீட்டில் இருக்கும் எல்லாருக்குமே தெரியும். அதை நீ மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறாய்" என்று செழியனை திட்டுகிறாள், ஜெனிஃபர்.



    ராமமூர்த்தி தாத்தாவிற்கு ஏதாவது ஒரு நகை வாங்கி கொடுக்கலாம், அல்லது அவர் அறையில் ஒரு பெரிய டிவி வாங்கி வைக்கலாம் என்று ஜெனிஃபர் தன் ஐடியாவை சொல்ல, செழியன் முகத்தில் அப்படி ஒரு மரணபீதி - "அவ்ளோ பட்ஜெட்லாம் என்கிட்ட இல்ல! இதைப்பற்றி நாம் பிறகு பேசலாம்!" என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்கிறான். இதோடு அந்த ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது .

    அதுமட்டுமில்லை, இந்த கொண்டாட்டத்திற்கு ராதிகாவும் மயூவுடன் வரபோவதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. ராதிகா வந்தால் கோபிக்கு பெரிய ஷாக் தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி