Home /News /entertainment /

எல்லா தப்பும் உன் மேலே தான்.. பாக்கியாவிடம் பாய்ந்த கோபி அம்மா!

எல்லா தப்பும் உன் மேலே தான்.. பாக்கியாவிடம் பாய்ந்த கோபி அம்மா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

இனியா கோபியுடன் சென்று விட்டார். இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா மீது மொத்த கோபத்தையும் காட்டுகிறார் கோபி அம்மா.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டில் இருக்கும் வரை அவரை தவிர மற்ற எல்லோரும் பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்து வந்தனர். ஆனால் கோபி போன பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் பாக்கியாவுக்கு எதிராக மாறி விட்டனர். ஜெனி, எழில், ராமமூர்த்தி தாத்தா பாக்கியா பக்கம் நிற்க, செழியன், ஈஸ்வரி, இனியா ஆகியோர் பாக்கியாவிடம் பேசுவது கூட இல்லை. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இனியா கோபியுடன் சென்று விட்டார். இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியாது.

    சன் டிவி சீரியல் நடிகருடன் ராஜ்கிரண் மகள் ஜீனத் காதல் திருமணமா?

    இனியாவை காணவில்லை என பாக்கியா அங்கும் இங்கும் தேடி பார்க்கிறார். ஆனால் இனியா எங்கும் இல்லை. கவலையில் வீட்டில் பாக்கியா புலம்ப, ஜாலியாக வீடு வந்து சேர்கிறார் இனியா. பாக்கியா விசாரித்த பிறகு தான் இனியா கோபியுடன் சென்றது  தெரிய வருகிறது. உடனே ஜெனியும், ராமமூர்த்தி தாத்தாவும் இனியாவை திட்டுகின்றனர். அப்போது தான் கோபி, செழியனுக்கு ஃபோன் செய்து முன்பே விஷயத்தை சொன்னது எல்லோருக்கும் தெரிகிறது.

    rj vigneshkanth marriage : நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்..இனிதே நடந்த விக்னேஷ்காந்த் திருமணம்!

    அதுமட்டுமில்லை செழியன் கோபி ஃபோன் பேசிய உடனே ஈஸ்வரி பாட்டிக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லி இருக்கிறார். ஆனால் ஈஸ்வரி பாட்டி, செழியன் எல்லோரும் வேண்டுமென்றே அமைதியாக இருந்து கொண்டு பாக்கியாவை அலைய விட்டனர். இது தெரிந்ததும் பாக்கியா கோபத்தில் கத்த எல்லா பிரச்சனைக்கும் நீ தான் காரணம் என்கிறார் கோபி அம்மா ஈஸ்வரி. உன்னால் தான் இன்னிக்கு இனியா அவளுடைய  சொந்த அப்பாவை திருட்டு தனமாக சந்தித்து பேசும் அளவுக்கு வந்து இருக்கிறது. இது எல்லாத்துக்கும் நீதான் காரணம் என்கிறார். பாக்கியாவுக்கு சோகம் தாங்கல.வழக்கம் போல் அமைதியாக போகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி