Home /News /entertainment /

40 லட்சம் கொடுத்தால் வீட்டை விட்டு போறேன்.. பாக்கியாவுக்கு செக் வைத்த கோபி!

40 லட்சம் கொடுத்தால் வீட்டை விட்டு போறேன்.. பாக்கியாவுக்கு செக் வைத்த கோபி!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

கடைசியில் பாக்கியாவும் 40 லட்சம் பணத்தை நான் தருகிறேன் என சவால் விடுகிறார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாக்கியலட்சுமி சீரியலில் இன்று பரபரப்பான கட்டம். கோபியின் துணிகளை பெட்டியில் எடுத்து வந்து ஷாக் கொடுத்த பாக்கியா இன்று அவருடன் ஒரே ரூமில் இருக்க முடியாது என்கிறார். இதனால் அசிங்கப்பட்ட கோபி, பாக்கியாவுக்கு அடுத்த செக் வைக்கிறார்.

    பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1 வாரமாக கோபி - பாக்கியா விவாகரத்து எபிசோடு ஒளிப்பரப்பாகிறது. டைவர்ஸ் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்த பாக்கியா - கோபி சண்டை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இன்றும் தொடர்கிறது. பாக்கியாவை வீட்டை விட்டு போக சொல்கிறார் கோபி,. ஆனால் பாக்கியா முடியாது என தெளிவாக பதில் சொல்கிறார். இந்த வீடு, என் மகள், அத்தை, மாமா இவர்கள் யாருடனும் எனக்கு பிரச்சனை இல்லை. இவர்களுடன் தான் இருப்பேன் என்கிறார். ராமமூர்த்தி தாத்தாவும் பாக்கியா பக்கம் நிற்கிறார்.



    எதிர் நீச்சல் சீரியலில் அடுத்து நடக்க போவது இதுதான்..கெஸ் செய்ய முடியாத ட்விஸ்ட்!

    இதனால் கோபிக்கு வேற வழி கிடைக்கவில்லை. பணம் இருந்தால் போதும் என நினைக்கிறார். பணத்தை பற்றி பேச தொடங்குகிறார். இந்த வீடு ஹோம் லோன் போட்டு கட்டியது . மொத்தம் 40 லட்சம். அந்த பணத்தை கொடுத்தால் நான் வீட்டை விட்டு போகிறேன் என மொத்த குடும்பத்துக்கும் ஷாக் கொடுக்கிறார். இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு பிறகும் பாக்கியாவின் அருமை கோபிக்கு தெரியவில்லை என்பதே உண்மை. பணம் இருந்தால் போதும் என்பதே கோபியின் வாதம். இந்த வீட்டில் ஒண்ணு பாக்கியா இருக்கணும், இல்லை நான் இருக்கணும் என்கிறார்.

    என்னால முடியல.. வாந்தி வருது.. ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்ட ஆங்கர் ஜாக்குலின்

    ஈஸ்வரி அம்மா கோபிக்கு சப்போர்ட் செய்கிறார். ஆனால் ராமமூர்த்தி தாத்தா கோபியை வெளியே போக செல்கிறார். இதனால் பாக்கியாவிடம் பணம் கேட்கிறார் கோபி. கடைசியில் பாக்கியாவும் 40 லட்சம் பணத்தை நான் தருகிறேன் என சவால் விடுகிறார். ஜெனி இடையில் கோபியை கேள்வி கேட்கிறார். ஆனால் பாக்கியா 40 லட்சத்தை நான் தரேன் என ஒத்துக் கொள்கிறார். மொத்த குடும்பத்திற்கும் ஷாக்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி