Home /News /entertainment /

பாக்கியா குடும்பத்துக்கு வந்த சோதனை... கல்யாணத்துக்கு ரெடியான கோபி!

பாக்கியா குடும்பத்துக்கு வந்த சோதனை... கல்யாணத்துக்கு ரெடியான கோபி!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரி அம்மா, இனியா , செழியன் எல்லோரும் பாக்கியாவிடம் பேசுவது இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியா குடும்பத்தில் சண்டை வெடிக்கிறது. ஒருபக்கம் இனியா பாக்கியா மீது கோபத்தை கொட்டி  தீர்க்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி பாட்டி எழிலை வெறுக்கிறார். ஆனால் கோபி எந்த கவலையும் இல்லாமல் கல்யாணத்துக்கு ரெடியாகிறார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்க இருப்பவை, கோபி இருக்கும் ஹோட்டலுக்கு செல்கிறார் ராதிகாவின் அண்ணன். கோபியிடம் கேஷ்வலாக பேசிவிட்டு ராதிகா பற்றி பேச்சு எடுக்கிறார். ராதிகாவை திருமணம் செய்து கொள்ள எப்பவுமே ரெடி என்கிறார் கோபி. ராதிகாவுக்கு ஏற்கெனவே கோபி விஷயத்தில் குற்றணர்ச்சி வந்து விட்டதால் மெல்ல மெல்ல அவரின் மனசு  மாறும் என்கிறார் ராதிகாவின் அண்ணன். கோபிக்கு சந்தோஷம் தாங்கல. கூடிய விரைவில் நல்ல செய்தியுடன் வருகிறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார்.

    5 வருஷ லவ்.. சொன்னப்படியே இந்த ஆண்டு பென்சியை கரம் பிடித்த புகழ்!

    இங்கு பாக்கியாவோ கோபியின் நினைவில் இருக்கிறார். அவர் வீட்டை விட்டு சென்றாலும் பாக்கியா கோபியை வெறுக்கவில்லை. அவர் காரில் வந்து இறங்குவது போலவே கனவு காண்கிறார். வீட்டில் ஈஸ்வரி அம்மா, இனியா , செழியன் எல்லோரும் பாக்கியாவிடம் பேசுவது இல்லை. ஆனால் அந்த சமயங்களில் எழில் அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கிறார்.

    மறுநாள் காலை இனியா ஸ்கூலுக்கு கிளம்புகிறார். டிபன் வேண்டாம் என்கிறார் . பாக்கியா அவரை சமாதானம் செய்ய,  இனியா கோபத்தில் கத்துகிறார். ஸ்கூல் பஸ்சில் போக பிடிக்கவில்லை, அப்பாவுடன் காரில் தான் போவேன் என்கிறார். எல்லாத்தையும் பழகி கொள் என பாக்கியா அட்வைஸ் செய்ய இனியாவுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது.

    என்னப்பா சொல்றீங்க! மகாபாரதம் தொடர் கிருஷ்ணாவுக்கு குரல் கொடுத்தது இந்த நடிகரா?



    பாக்கியாவை திட்டுகிறார். அதற்கு எழில் இனியாவை திட்ட ஈஸ்வரி பாட்டி எழிலை கண்டப்படி திட்டு விடுகிறார். ஒரே குடும்பத்தில் 2 கட்சி. எழில், ஜெனி, ராமமூர்த்தி தாத்தா எல்லோரும் பாக்கியா பக்கம் நிற்கிறார்கள். ஈஸ்வரி பாட்டி, இனியா, செழியன் எல்லோரும் கோபி  கட்சி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி