Home /News /entertainment /

கையும் களவுமாக மாட்டி கொண்டார் கோபி.. பாக்கியலட்சுமியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

கையும் களவுமாக மாட்டி கொண்டார் கோபி.. பாக்கியலட்சுமியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    பாக்கியலட்சுமி சீரியலில் உச்சக்கட்ட பரபரப்பு. இவ்வளவு நாளாக மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வந்த கோபி, மூர்த்தி மற்றும் தனத்திடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை நடந்த மகா சங்கமம் எபிசோடுகளில் இதுதான் பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு தரமான பல சம்பவங்கள் இன்று சீரியலில் அரங்கேறவுள்ளன. அதாவது நேற்றைய எபிசோடில் ராமமூர்த்தி தாத்தாவின் 75ஆவது பிறந்த நாள் விழாவுக்கு மயூவை அழைத்துக் கொண்டு ராதிகாவும் பாக்கியா வீட்டுக்கு வந்து இருந்தார். எப்படியாவது இன்று ராதிகா, கோபியை பார்த்து விட வேண்டும் என்று கோபியின் அப்பா ராமமூர்த்தி நினைத்தார்.

    பாக்கியலட்சுமி கோபி இப்படி கூட நடிப்பாரா? ஷாக்கான ரசிகர்கள்!

    ஆனால் வழக்கம் போல் கோபி, ராதிகா வருகிறார் என தெரிந்து கொண்டு ரூமில் மறைந்து கொண்டார். ஆபீஸ் மீட்டிங் என்று சொல்லி மொத்த குடும்பத்தையும் ஏமாற்றினார். இனியா, பாக்கியா என யார் வந்து அழைத்தும் கோபி கீழே வரவில்லை. கடைசியில் ராதிகா வீட்டுக்கு கிளம்பியதும் ஜாலியாக ஒரு டான்ஸ் போட்டுவிட்டு எதுவுமே தெரியாதது போல் கீழே இறங்கி வந்தார். கோபியின் தகிடுதத்தம் ராமமூர்த்தி தாத்தாவுக்கு மட்டுமே தெரியும்.

    இவருக்கு இதே வேலை தான்.. பிரபல சீரியல் நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்! ஏன்?

    அதனைத்தொடர்ந்து வெளியே கடைக்கு போவதாக கூறிவிட்டு ராதிகாவை மீட் செய்கிறார். வழக்கம் போல் ரொமான்ஸில் ராதிகா கையை பிடித்துக் கொண்டு கோபி பேச, அதை மூர்த்தி பார்த்து விடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. கோபி வசமாக மாட்டிக் கொண்டார். சந்தேகத்தை உறுதி செய்ய, ராதிகா வீட்டுக்கு மூர்த்தியும் தனமும் செல்கின்றனர்.



    அங்கு ராதிகா, கோபி ஃபோட்டோவை காட்டுகிறார். அதிர்ச்சியான தனம்-மூர்த்தி வீட்டுக்கு திரும்புகின்றனர். மனசுக்கு தாங்க முடியாமல் மூர்த்தி, கோபியை கேட்டு விடுகிறார். எல்லா உண்மையும் எனக்கு தெரியும் என கோபிக்கு அதிர்ச்சி கொடுக்க இருவருக்கும் சண்டை வெடிக்கிறது. இது எதுவுமே வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. ரசிகர்களின் கணிப்பு படி, குடும்ப சந்தோஷத்திற்காக மூர்த்தி இதை  வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல மாட்டார் என் தெரிகிறது. இதனால் இன்றைய எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி