Home /News /entertainment /

பாக்கியலட்சுமியில் கோபி - ராதிகாவுக்கு கல்யாணம் செய்து வைக்க போவது இவரா?

பாக்கியலட்சுமியில் கோபி - ராதிகாவுக்கு கல்யாணம் செய்து வைக்க போவது இவரா?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை வெறுக்க வேண்டாம் அவரையே கல்யாணம் செய்து கொள் என வற்புறுத்துகிறார் ராதிகாவின் அம்மா.

    பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் இறுதியில் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

    ஒரே நேரத்தில் 2 பெண்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்த கோபி வசமாக மாட்டிக் கொண்டார். மகா சங்கமத்தில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி, ராதிகாவிடம் கோபி தப்பானவர் என்று சொல்ல, ராதிகா கோபியின் வீட்டை பற்றி கேட்கிறார். இந்த கோபத்தில்  கோபி குடித்துவிட்டு எல்லாம் உண்மைகளையும் உளறி விட்டார். பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை தெரிந்த உடனே ராதிகா உடைந்து விட்டார். கோபியை வீட்டை விட்டு வெளியே துரத்தி இனிமேல் கல்யாணம் பற்றி பேச கூடாது, வீட்டுக்கும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். கடந்த 1 வாரமாக சீரியலில் இதுக் குறித்த காட்சிகள் தான் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

    மிகப் பெரிய வெற்றி.. சந்தோஷத்தில் சன் டிவி எதிர் நீச்சல் சீரியல் குழு!

    நேற்றைய தினம் பாக்கியா, கோபியிடம் கேள்வி கேட்டு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார். பாக்கியா இப்படியெல்லாம் பேசுவார் என்பது கோபிக்கு தெரியாது. அதிர்ச்சியில் பதில் சொல்ல முடியாமல் முழித்தார். இதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் பாக்கியாவுக்கு எந்த சந்தேகமும் வர கூடாது என்று மொத்த குடும்பத்திடமும் நடிக்க தொடங்குகிறார் கோபி .கேஷூவலாக தனது அப்பா, அம்மா,  இனியாவிடம் பேசி கூலானான டாடி போல் காட்டிக் கொள்கிறார். கோபியின் இந்த மாற்றத்தை நோட் செய்த செல்வி அக்கா, பாக்கியாவிடம் இதை  கூறுகிறார்.

    இது எல்லாம் முடிந்த உடனே ராதிகா வீட்டுக்கு கிளம்பி போகும் கோபி, ராதிகாவின் அம்மாவை சந்திக்கிறார். அவருக்கு எல்லா உண்மைகளும் தெரியும். ஊரில் இருந்து வந்தவரிடம் ராதிகா எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். ஆனால் அவரோ ராதிகாவை சமாதானம் செய்து கோபிக்கு கல்யாணம் செய்து வைக்க தான் நினைக்கிறார். அவரிடம் கோபி, நடந்தது தப்பு தான் என கூறி மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ராதிகாவுக்கு கோபியை பார்த்ததும் கோபம் தான் வருகிறது.

    பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகும் சமந்தா.. தீயாய் பரவும் தகவல்!

    கோபி சென்ற பின்பு ராதிகாவிடம் பேசும் அவர், கோபியை வெறுக்க வேண்டாம் அவரையே கல்யாணம் செய்து கொள் என வற்புறுத்துகிறார். டீச்சருக்கு துரோகம் செய்ய கூடாது என்று உறுதியாக இருக்கும் ராதிகாவை அவரின் அம்மா சமாதானம் செய்து கோபிக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என நினைக்கிறார். இதற்கு மயூவை பற்றி பேசி ராதிகாவின் மனசை மாற்றுகிறார்.
    கதை போகும் போக்கை பார்த்தால் ராதிகாவின் அம்மா தான் கோபி - ராதிகாவுக்கு திருமணம் செய்து வைப்பார் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி