Home /News /entertainment /

தன்னை பற்றி மிகப் பெரிய உண்மையை சொன்ன பாக்கியலட்சுமி எழில்!

தன்னை பற்றி மிகப் பெரிய உண்மையை சொன்ன பாக்கியலட்சுமி எழில்!

பாக்கியலட்சுமி எழில்

பாக்கியலட்சுமி எழில்

விஜே விஷாலுக்கு பிரேக்கப் ஆன விஷயம் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலில் எழில் ரோலில் நடிக்கும் நடிகர் விஜே விஷால் தனக்கு பிரேக்கப் ஆகிவிட்டதாக விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

    பெண்களின் ஃபேவரெட் சின்னத்திரை நாயகனாக வலம் வருகிறார் விஜே விஷால். பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் இளைய மகனாக எழில் என்ற ரோலில் நடிக்கிறார். இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளனர். பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, கோபிக்கு பிறகு ரசிகர்கள் பெரிதும் விரும்பும் ரோல் எழில். அம்மாவுக்கு துணையாக நிற்கும் மிகச் சிறந்த பையன் ரோல். விஜேவாக தனது பயணத்தை தொடங்கிய விஷால் இன்று சின்னத்திரை நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜே விஷால் விஜய் டிவி சீரியல் நடிகையை காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின.

    இது த்ரிஷாவுக்கு தெரியுமா? ’பொன்னியின் செல்வன்’ குந்தவை போல் மாறிய பிக் பாஸ் ஸ்ருதி!

    நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜே விஷாலுக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருது வழங்கப்பட்டது. அப்போது விஷாலுக்கு அடுத்தப்படியாக கேமரா, ராஜா ராணி நடிகை ரியாவுக்கு அதிக ஃபோகஸ் தந்தது. அவரும் வெட்கத்தில் சிரித்தார். இதை ரசிகர்கள் கவனித்து விட்டனர். உடனே, விஷால் காதலிக்கும் பெண் ராஜா ராணி சந்தியாவாக நடிக்கும் ரியா தான் என்று கமெண்டுகள் பறந்தனர். இந்த தகவலுக்கு இருவரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. சில நாட்கள் கழித்து இந்த கதையை ரசிகர்கள் அப்படியே மறந்து விட்டனர்.,

    இப்படி இருக்கையில் விஜே விஷால், பாக்கியா, ராதிகா, செல்வி அக்கா ஆகியோர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜூ வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்டனர். அப்போது ஆங்கர் பிரியங்கா விஷாலிடம் ராஜா ராணி சீரியலை பற்றி பேசிவிட்டு உடனே நீ இப்ப சிங்கிளா? என விஷாலிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு எழில் சிங்கிள் தான் பிரேக்கப் ஆகிவிட்டதாக பதில் கூறினார். பிரியங்கா அதை நம்பவில்லை, மறுபடியும் அழுத்தி அழுத்தி கேட்டார். ”சத்தியமா அக்கா, 2 மாசமா உங்கிட்ட பேசல அதனால உங்களுக்கு தெரியல. எனக்கு பிரேக்கப் ஆகிவிட்டது”  என்றார். தைரியமாக பதில் கூறிவிட்டு அதற்கு ஸ்வீட்டும் எடுத்து சாப்பிட்டார். இதை ராஜூவும் கலாய்த்து இருந்தார். இந்நிலையில் விஜே விஷாலுக்கு பிரேக்கப் ஆன விஷயம் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. ஒருபக்கம் பெண் ரசிகைகள் செம்ம ஹாப்பி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி