Home /News /entertainment /

பாக்கியலட்சுமி அமிர்தா சொன்ன குட் நியூஸ்!

பாக்கியலட்சுமி அமிர்தா சொன்ன குட் நியூஸ்!

அமிர்தா

அமிர்தா

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் ரோல் பலரையும் ஈர்த்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமியில் அமிர்தா மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்துள்ளார். இதுக் குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்கிற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ்செல்வி. இவரை ஒட்டுமொத்த தமிழ் டிவி ரசிகர்களுக்குக்கும் அறிமுகம் செய்த பெருமை - பாக்கியலட்சுமி சீரியலையும், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியையுமே சேரும். பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவின் ரோல் பலரையும் ஈர்த்துள்ளது. எழிலுக்கு ஜோடியாக நடிக்கும் ரித்திகா, வெறுமென ஒரு சப்போர்டிங் ரோலாக வலம் வராமல், கணவனை இழந்த ஒரு பெண் குழந்தையுடன் படும் கஷ்டங்களையும், மறுமணம் செய்து கொள்வதில் இருக்கும் சமூக சிக்கல்களையும் கண்முன் காட்டுகிறார்.



    bharathi kannamma : கஷ்டப்பட்டு பிளான் போட்ட வெண்பாவுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!

    நடிப்பில் மட்டுமில்லை ரித்திகா சமூக ஊடக தளங்களிலும்  மிகவும் ஆக்டிவாக  இருக்கிறார். தனக்கென ஒரு ஆர்மியையும் உருவாக்கி வருகிறார், அவ்வவ்போது போட்டோ மற்றும் வீடியோக்களையும் பகிர்வார். இப்படி இருக்கையில் கொஞ்ச காலமாக சீரியலில் அமிர்தாவாக ரித்திகாவை பார்க்க முடியவில்லை. அதாவது எழில் - அமிர்தா கதை தொடர்ந்து காட்டப்பட்டு வந்த நிலையில் கோபி - ராதிகா உண்மை தெரிய வந்த பின்பு அந்த லவ் ட்ராக் அப்படியே நிறுத்தப்பட்டது.

    இதுக் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ரித்திகாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் பாக்கியலட்சுமியில் அமிர்தா மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்துள்ளார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்கியாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    அடுத்த வாரத்தில் மீண்டும் அமிர்தா ரோல் காட்டப்படும். அவர் பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக இருப்பார்,  எழில் - அமிர்தா  காதல் கதை ஈஸ்வரி பாட்டிக்கு தெரிய வரும் என பல திருப்பங்கள் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு அமிர்தாவாக ரித்திகாவை பார்த்ததில் ரசிகர்கள் செம்ம ஹேப்பி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி