சீரியலில் பாக்கியாவின் செல்ல மகன் எழில்.. நிஜ அம்மாவை ஏன் இப்படி அழ வைக்கணும்?

பாக்கியலட்சுமி எழில்

சீரியலில் அம்மாவுக்கு பிடித்த செல்ல மகனான விஷால், நிஜத்தில் எப்படி தெரியுமா?

 • Share this:
  பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் செல்ல மகனான எழிலின் நிஜ அம்மாவை பார்த்துள்ளீர்களா? இதோ அவர் தனது அம்மாவை பற்றி பகிர்ந்து கொண்டது.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி இல்லத்தரசிகளின் உள்ளம் கவர்ந்த சீரியலாக உள்ளது. இல்லத்தரசிகளின் பிரதிபலிப்பாக நம் வீடுகளில் இருக்கும் அம்மா, அண்ணி, மனைவிகளின் வாழ்வை சொல்லும் மிகச் சிறந்த படைப்பாக பாக்கியலட்சுமி சீரியல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாமியார், கணவரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் பாக்கியாவுக்கு தூண் போல் நிற்பது இளைய மகன் எழில் தான். இந்த சீரியலில் பாக்கியாவுக்கு அடுத்து மிகப் பெரிய வரவேற்பு எழிலுக்கு தான். அதிலும் இன்றைய இளம் தலைமுறை பெண்கள் விரும்பும் இளைஞராக எழில் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மரியாதை , அம்மாவின் முயற்சிக்கு துணையாக நிற்க வேண்டும் என சீரியல் பார்ப்பவர்களை எழில் கதாபாத்திரம் எளிதில் கவர்ந்து விடும்.

  இந்த சீரியலில் எழிலாக சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி இருக்கும் விஜே விஷால் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.அது தவிர மாடலிங் விளப்பரங்களிலும் நடித்து வருகிறார். விஷாலுக்கு பெண்கள் மத்தியில் மவுசு அதிகம். இவரின் இன்ஸ்டாவிலும் அதிகப்படியான பெண் ரசிகைகள் இவரை பின் தொடர்கின்றனர். சீரியலில் அம்மாவுக்கு பிடித்த செல்ல மகனான விஷால், நிஜத்தில் எப்படி தெரியுமா? இதை அவரின் அம்மாவே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பாக்கியலட்சுமி சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிக்கரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த 300 ஆவது எபிசோடு கொண்டாட்டம் விஜய் டிவியில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இன்று ஒளிப்பரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் விஜே விஷாலின் நிஜ அப்பா, அம்மா, பாட்டி கலந்து கொள்கிறார்கள், ரீல் அம்மாவுடன் நிஜ அம்மாவும் அந்த மேடையில் நிற்கின்றனர். அம்மாவைப் பார்த்ததும் விஷால் பயங்கரமாக அழுகிறார். இதுவரை ஸ்கூல், காலேஜில் அவரின் அம்மாவை பிரச்சனைக்காக மட்டும் தான் அழைத்து சென்றிருக்கிறாராம். ஆனால் இப்போது மகிழ்ச்சியான பெருமையான தருணத்தில் அவரை நிற்க வைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக விஷால் ஆனந்த கண்ணீரில் பதிவு செய்துள்ளார்.  அதுமட்டுமில்லை, விஷாலின் அம்மாவும் அவரை பற்றி சில வரிகள் பகிர்ந்துள்ளார். சீரியலில் இருப்பதை போல தான் நிஜத்தில் விஷால் நடந்து கொள்வாராம். அம்மாவுக்கு பயங்கர சப்போர்ட். அம்மா செல்லம் வேற, சீரியலில் பாக்கியாவுடன் எழில் பாசத்தை பொழியும் காட்சிகளில் தன்னையே அறியாமல் அவர் அழுதுவிடுவாராம். மொத்தத்தில் இந்த பாசக்கார அம்மா- பையனை பார்த்ததும் சுத்தி போட வேண்டும் என்று தான் தோன்றுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: