Home /News /entertainment /

பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை ராதிகாவுக்கு தெரிய போகிறதா? பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்!

பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை ராதிகாவுக்கு தெரிய போகிறதா? பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தான் பாக்கியாவின் கணவர் என்ற உண்மையை ராதிகா அறியும் தருணம் விரைவில் டெலிகாஸ்ட் ஆகவுள்ளதாம்.

    பாக்கியலட்சுமி சீரியலில் உண்மை உடையும் நேரம் வந்துவிட்டது. அதாவது, பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மையை ராதிகா அறிந்து கொள்ளும் ட்ராக் கூடிய விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த தருணம் இன்னும் சில நாட்களில் எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இத்தனை நாட்களாக கோபி, பாக்கியா- ராதிகா 2 பெண்களையும் ஏமாற்றி கொண்டிருந்தார். கடைசியாக நடந்த மகா சங்கமம் எபிசோடில் ராதிகாவுக்கு மிகப் பெரிய உண்மையை மூர்த்தியும் தனமும் சொல்லி விட்டு சென்றனர். இப்படி இருக்கையில் ராதிகாவுக்கு கோபி மீது சந்தேகம் வர தொடங்கி விட்டது. கோபியின் குடும்பத்தை நேரில் பார்த்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கிறார். கோபியும் எவ்வளவு சொல்லியும் ராதிகா கேட்பதாக தெரியவில்லை.

    இதையும் படிங்க.. மழையில் வழுக்கி விழுந்த சீரியல் நடிகை Rachitha Mahalakshmi.. உண்மையாகவே விழுந்தாரா.? இல்ல நடிப்பா.?

    இப்படி இருக்கையில், நேற்றைய எபிசோடில் கோபிக்கும் - ராதிகாவுக்கும் சண்டை வெடிக்கிறது. கோபத்தில் ராதிகா, கோபியை வீட்டை விட்டு போக சொல்கிறார். கோபிக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் ராதிகாவுக்கு கூடிய விரைவில் எல்லா உண்மைகளும் தெரிய போகிறதாம்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    அதாவது கோபி தான் பாக்கியாவின் கணவர் என்ற உண்மையை ராதிகா அறியும் தருணம் விரைவில் டெலிகாஸ்ட் ஆகவுள்ளதாம். இவ்வளவு நாளாக ராதிகாவை ஏமாற்றிய கோபியை பற்றி முதன்முறையாக ராதிகா தெரிந்து கொள்ள போகிறாராம். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பயங்கர எதிர்பார்புடன் இருக்கின்றனர். அதுமட்டுமில்லை இனிமேல் ராதிகா ட்ராக் நெகட்டிவாக மாறும் என்றும்  ஒரு தரப்பில் கூறப்படுகிறது.ஆக மொத்த கோபியின் தகிடுதத்தம் கூடிய விரைவில் முடிவுக்கு வர போகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி